கஜராஜா பலராமா யானை மறைவு சோகத்தில் ஆழ்த்தியுள்ளது…பிரதமர் மோடி இரங்கல்.!!

pm modi sad

மைசூர் தசரா கொண்டாட்டங்களில் முக்கிய பங்கு வகித்து வந்த கஜராஜா பலராமா என்கிற யானை உடல்நலப் பிரச்சினைகள் மற்றும் காசநோய் காரணமாக நேற்று உயிரிழந்தது. இதனையடுத்து,  பிரதமர் நரேந்திர மோடி பலராமனுக்கு அஞ்சலி செலுத்தியதுடன், இந்த சம்பவத்தால் தான் வருத்தம் அடைவதாக தெரிவித்துள்ளார்.

இது குறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டரில் கூறியதாவது ” பல ஆண்டுகளாக, மைசூரில் நடந்த தசரா கொண்டாட்டங்களில் கஜராஜா பலராமா  முக்கிய அங்கமாக இருந்தார். மா சாமூண்டீஸ்வரியை சுமந்து வந்த அந்த யானையை மக்கள் அன்புடன் நினைத்துப் பார்க்கிறார்கள். இந்த மறைவு என்னை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. ஓம் சாந்தி!’ என பதிவிட்டுள்ளார்.

மறைந்த கஜராஜா பலராமா யானை 1958 இல் பிறந்தது. இது, மைசூர் தசரா விழாவில் கிட்டத்தட்ட 13 முறை தங்க ஹவுடாவை ஏந்திச் சென்றுள்ளது. மேலும்,  இந்த யானை கர்நாடகாவின் நாகர்ஹோலே புலிகள் காப்பகத்தில் உள்ள யானைகள் முகாமில் வசித்து வந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்