ஓமைக்ரான் நோயால் பாதிக்கப்பட்ட நபர் உயிரிழப்பு..!

மகாராஷ்டிராவில் ஓமைக்ரான் நோயால் பாதிக்கப்பட்ட 52 வயது நபர் மாரடைப்பால் உயிரிழந்தார்.
இந்தியாவில் ஓமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்ட ஒருவர் மகாராஷ்டிராவில் உயிரிழந்தார். மகாராஷ்டிராவின் பிப்ரி சின்ச்வாட் பகுதியைச் சேர்ந்த 52 வயது நபர் மாரடைப்பால் உயிரிழந்தார். கொரோனா வைரஸின் ஓமைக்ரான் மாறுபாட்டால் பாதிக்கப்பட்ட இந்த நபர் பிம்ப்ரி சின்ச்வாடில் உள்ள யஷ்வந்த்ராவ் சவுகான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 52 வயதான இவர் சமீபத்தில் நைஜீரியாவிலிருந்து இந்தியா வந்துள்ளார்.
இந்தியாவில் ஓமைக்ரான் நோயால் பாதிக்கப்பட்ட ஒருவர் உயிரிழந்த சம்பவம் இதுவே முதல்முறையாகும். நோயாளிக்கு கடந்த 13 ஆண்டுகளாக நீரிழிவு நோய் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்தியாவில் பல மாநிலங்களில் ஓமைக்ரான் பரவி வருகிறது. நாட்டிலேயே மகாராஷ்டிரா, டெல்லியில் தான் அதிகமாக ஓமைக்ரான் பரவியுள்ளது. மகாராஷ்டிராவில் ஓமைக்ரான் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 450 ஆக உயர்ந்துள்ளது. இருப்பினும், ஓமைக்ரான் பரவலுக்கு மத்தியில் மாநில அரசு பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
மகாராஷ்டிராவில் ஏற்கனவே இரவு ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. அதே நேரத்தில், நேற்று முதல் முதல் மும்பையில் 144 தடையை அமல்படுத்தப்பட்டுள்ளது.