தேசிய பேரிடர் மேலாண்மை சார்பில் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்தது அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதிலும் தற்பொழுது நிவர் புயல் காரணமாக பல்வேறு இடங்களில் மிக கன மழையும் புயலும் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றன. தற்போது தேசிய பேரிடர் மேலாண்மை சார்பில் பொதுமக்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்று தேசிய பேரிடர் மேலாண்மை குழு சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் இன்று நள்ளிரவு அல்லது நாளை அதிகாலை நேரத்தில் பாண்டிச்சேரியை சுற்றியுள்ள பகுதிகளில் நிவர் புயல் கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே அச்சமயம் புயல் காற்றின் வேகம் மணிக்கு 145 கிலோ மீட்டர் வரை இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுவதாகவும், தமிழக கடற்கரை மாவட்டங்களில் உள்ள பொதுமக்கள் வெளியில் வர வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்படுகிறது எனவும் கூறப்பட்டுள்ளது.
மேலும் தாழ்வான பகுதி மற்றும் உறுதியற்ற வீடுகளில் வசிக்கக்கூடிய மக்கள் முன்னெச்சரிக்கையாக நிவாரண முகாமுக்கு செல்லுமாறும், முக்கியமான ஆவணங்களை பத்திரமாக எடுத்து வைத்துக் கொள்ளுமாறும் தேவையான அத்தியாவசியமான பொருட்கள் மற்றும் சுத்தமான குடிநீர் இருப்பு வைத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும் கால்நடைகளின் பாதுகாப்பை உறுதி செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதோ அந்த அறிக்கை,
சென்னை : கடந்த மாதம் 14-ஆம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவையில் பொது பட்ஜெட்டும், 15ம் தேதி வேளாண் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டது.…
கோவை : கோவையில் வரும் 26, 27ம் தேதி தவெக தலைவர் விஜய் தலைமையில் பூத் கமிட்டி கூட்டம் நடைபெற…
டெல்லி : அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் மற்றும் அவரது மனைவி உஷா வான்ஸ் ஆகியோர் காலை 10 மணி…
சென்னை : விசிக தலைவர் திருமாவளவன் நேற்று வீடியோ ஒன்றை வெளியிட்டு சில விஷயங்களை பேசியிருந்தார். அதில் " ஒரு…
சென்னை : தமிழகத்தில் பல்கலைக்கழகங்களின் வேந்தராக (Chancellor) இருக்கும் ஆளுநருக்கு, பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாக்கள் மற்றும் துணைவேந்தர்கள் மாநாடு போன்றவற்றை நடத்துவதற்கு…
மும்பை : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மா சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த நிலையில்,…