ஆதார் அட்டையை புதுப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு! வெளியான முக்கிய அறிவிப்பு
Aadhaar: ஆதார் அட்டையை இலவசமாக புதுப்பிப்பதற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி காலக்கெடுவானது ஜூன் மாதம் 14-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக காலக்கெடு மார்ச் 14 -ஆம் தேதி வரை மட்டுமே என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது இந்திய தனித்துவ அடையாள ஆணைய அமைப்பு (UIDAI) ஜூன் 14 வரை நீட்டித்துள்ளது.
Read More – ஹரியானாவின் புதிய முதல்வராக நயாப் சிங் சைனி பதவியேற்றார்!
ஆதார் அட்டை என்பது மிக முக்கிய அடையாளச் சான்றாகும். ஆதார் அட்டை இல்லாமல் வங்கி கணக்கு தொடங்குவது முதல், சிம் கார்டு பெறுவது, பள்ளியில் கல்லூரியில் சேர்வது என அனைத்துமே சிக்கலாக மாறிவிடும். ஆதார் அட்டையில் உள்ள தகவல்கள் சரியானதாக இருக்க வேண்டியது அவசியமாகும்.
Read More – குஜராத்தில் ரூ.480 கோடி போதைப்பொருள் பறிமுதல்.. 6 பாகிஸ்தானியர்கள் கைது!
இதை உறுதிபடுத்த, ஆதார் அட்டையில் உள்ள தகவல்களை புதுப்பிப்பது (Aadhaar Card Update) மிக முக்கியமாகும். இந்த நிலையில் ஆதாரின் அதிகாரபூர்வ எக்ஸ் தள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள பதிவில், “UIDAI இலவச ஆன்லைன் ஆவணப் பதிவேற்ற வசதி ஜூன் 14, 2024 வரை நீட்டிக்கபட்டுள்ளது, ஆதார் வைத்திருக்கும் கோடிக்கணக்கானோரின் வசதிக்காக இந்த காலக்கெடு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
Read More – ராஜஸ்தானில் இந்திய விமானப்படை விமானம் விபத்து!
இந்த இலவச சேவை myAadhaar போர்ட்டலில் மட்டுமே கிடைக்கும். UIDAI, தங்கள் ஆதாரில் புதுப்பித்துக்கொள்ள மக்களை தொடர்ந்து ஊக்கப்படுத்தி வருகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.