பெங்களூ யஸ்வந்த்பூர் ரயில் நிலையத்தின் பிளாட்பார்ம் எண் ஒன்றில் ட்ராம்மில் பெண்ணின் சடலம் கண்டெடுப்பு.
பெங்களூ யஸ்வந்த்பூர் ரயில் நிலையத்தின் பிளாட்பார்ம் எண் ஒன்றில் ட்ராம் ஒன்று இருப்பதை துப்புரவு பணியாளர்கள் பார்த்துள்ளனர். அந்த ட்ரம்மில் இருந்து துர்நாற்றம் வருவதை கண்டு ரயில்வே போலீசாருக்கு துப்புரவு பணியாளர்கள் தகவல் அளித்துள்ளனர்.
மூடப்பட்டு இருந்த ட்ரம்மில் 20 வயதுக்கு மேல் இருக்கும் பெண் ஒருவரின் சடலம் அழுகிய நிலையில் இருந்துள்ளது. இன்னும் அந்தப் பெண் யார் என்று அடையாளம் காணப்படவில்லை. இந்த சடலம் இரண்டு அல்லது மூன்று நாட்கள் பழமையானதாக இருக்கும் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
இதனை அடுத்து அந்த பெண்ணின் சடலம் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ள நிலையில், தடவியல் நிபுணர்கள் அப்பகுதியில் தடயங்களை ஆய்வு செய்து வருகின்றனர்.
ரயில்வே மேலாளர் குசுமா கரிபிரசாந்த் கூறுகையில், பிளாட்பார்ம் எண் ஒன்றில் உள்ள பெட்டிக்குள் அழுகை நிலையில் துப்புரவு பணியாளர்கள் பெண்ணின் உடலை கண்டுபிடித்தனர். தடவியல் நிபுனர்கள் குழு ரயில் நிலையத்தில் ஆய்வு மேற்கொள்கின்றனர்.
இது தொடர்பாக ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு செய்து வருகின்றனர்.
சென்னை: பெரியார் குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சில கருத்துகளை தெரிவித்து இருந்தார். இது தற்போது அரசியல்…
சென்னை : இந்திய கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சனுக்கு அணியில் விளையாட வாய்ப்புகள் சரியாக வழங்கப்படாதது ஒரு பெரிய கேள்விக்குறியான…
சென்னை : 2025ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த திங்கட்கிழமை முதல் தொடங்கி நடந்து வருகிறது. இன்று 5-ஆம்…
சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்பெரியார் குறித்து சர்ச்சையாக பேசியுள்ளது அரசியல் வட்டாரத்தில் புயலை கிளப்பியுள்ளது. பெரியார் குறித்து…
நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்டு டொனால்ட் டிரம்ப் வெற்றிபெற்ற நிலையில், வரும் ஜனவரி 20-ஆம் தேதி பதவியேற்கவுள்ளார்.…
திருப்பதி : ஆந்திர பிரதேச மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் (ஜனவரி 10) முதல் ஜனவரி 19ஆம் தேதி வரை…