ஜலந்தர் ரயில் நிலையத்தில் சூட்கேஸுக்குள் சடலம்.. போலீஸ் விசாரணை!
பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் ரயில் நிலையத்தில் சூட்கேஸுக்குள் சடலம் கண்டெடுக்கப்பட்டதால் பரபரப்பு.
பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் உள்ள ரயில் நிலையத்திற்கு வெளியே சூட்கேஸில் அடைக்கப்பட்ட நிலையில், ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அந்த சூட்கேஸ் குறித்து அந்த வழியாக சென்ற ஒருவர் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை அந்த சூட்கேஸில் சடலம் இருப்பதை கண்டுபிடித்துள்ளது.
இதுதொடர்பாக அரசு ரயில்வே காவல்துறையின் ஏசிபி கூறுகையில், ரயில் நிலையத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை நாங்கள் ஸ்கேன் செய்தோம், அதில் 30 வயதிற்குட்பட்ட ஒருவர் சூட்கேஸை வைத்துவிட்டு டிக்கெட் கவுன்டரை நோக்கி செல்வதைக் காண முடிந்தது என்றும் சூட்கேஸுக்குள் சடலம் கண்டெடுப்பு தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார்.