யமுனை ஆற்றில் மிதக்கும் இறந்த உடல்கள்…! பீதியில் உறைந்த மக்கள்…!

Published by
லீனா

யமுனை ஆற்றில் மிதக்கும் இறந்த சடலங்களால் பீதியில் ஆழ்ந்துள்ள, குடியிருப்புவாசிகள்.

இந்தியாவில் கொரோனா வைரசின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், உத்தரப்பிரதேசத்தில் இந்த வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் ஹமீர்பூரில் உள்ள யமுனை ஆற்றில், இறந்த உடல்கள் பல மிதப்பதால் அப்பகுதியில் வாழும் உள்ளூர்வாசிகள் பீதியடைந்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து அப்பகுதியில் வசிக்கும் குடியிருப்பாளர்கள் கூறுகையில், சடலங்கள் கொடிய கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட கிராமவாசிகளின் உடல்கள் என்றும், இறந்த உடல்களை தகனம் செய்வதற்கு இடங்கள் இல்லாத சூழலில் இவ்வாறு சடலங்கள் தூக்கி எரியப்பட்டுள்ளதாகவும் உள்ளூர்வாசிகள் சந்தேகிக்கின்றனர்.

இதுகுறித்து, ஹமீர்பூர் உதவி போலீஸ் சூப்பிரண்ட் அனூப் குமார் சிங் கூறுகையில், யமுனா நதி ஹமீர்பூருக்கும், கான்பூருக்கும் இடையிலான எல்லையாக பாய்கிறது. உள்ளூர்வாசிகள் இந்த நதியை புனிதமான ஒன்றாக கருதுகின்றனர். மேலும் இறந்த கிராமவாசிகளின் உடல்கள் ஆற்றில் மிதக்க விடுவது ஒரு பழமையான சடங்கு என தெரிவித்துள்ளார்.

மேலும், இதுபோன்ற ஒரு சம்பவம் பீகாரிலும் நடைபெற்றுள்ளது. பீகார் மாநிலம் கதிஹாரில் இருந்து கோவிட் பாதிக்கப்பட்டவர்களின் உடல்கள் ஆறுகளில் கொட்டப்பட்ட ஒரு அதிர்ச்சியான சம்பவம் நிகழ்ந்துள்ளதாகவும்,  மருத்துவமனை ஊழியர்கள் உடல்களை ஆற்றில் கொட்டுவது குறித்து விசாரிக்க விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.

Published by
லீனா

Recent Posts

‘ஓய்வு பெற்றால் என்ன? ..தேவைப்பட்டால் திரும்ப வருவேன்..’! அலர்ட் கொடுத்த டேவிட் வார்னர்!

‘ஓய்வு பெற்றால் என்ன? ..தேவைப்பட்டால் திரும்ப வருவேன்..’! அலர்ட் கொடுத்த டேவிட் வார்னர்!

சிட்னி : இந்தியா மற்றும் ஆஸ்ரேலியா இரண்டு அணிகளும் வருடம்தோறும் மோதிக்கொள்ளும் டெஸ்ட் கிரிக்கெட் தொடரான (பார்டர்-கவாஸ்கர் டிராபி) தொடர் இந்த…

23 mins ago

‘உக்ரைன் விவகாரத்தில் அமைதியான முறையிலே தீர்வு வேண்டும்’ ..புடினிடம் பிரதமர் மோடி வலியுறுத்தல்!

கசான் : ரஷ்யா, தென்னாப்பிர்க்கா, சீனா, இந்தியா, பிரேசில் உள்ளிட்ட நாடுகளை உள்ளடக்கிய ‘பிரிக்ஸ்’ கூட்டமைப்பின் மாநாடு 16வது உச்சிமாநாடு…

1 hour ago

டானா புயல் எதிரொலி : 28 ரயில் சேவைகள் ரத்து..! முழு விவரம் இதோ!

டெல்லி : வங்கக்கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் நாளை காலை கிழக்கு மத்திய…

1 hour ago

எடப்பாடி பழனிச்சாமி கனவில் இருக்கிறாரா? கேள்வி எழுப்பிய முதல்வர் மு.க.ஸ்டாலின்!

நாமக்கல் : அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவானது இன்று நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற முதல்வர் மு.க.…

2 hours ago

ஐப்பசி மாதத்தில் துலாஸ்நானம் ஏன் செய்ய வேண்டும் தெரியுமா?

சென்னை -துலா ஸ்நானம்  என்றால் என்ன, அதன் பலன்கள் மற்றும் ஐப்பசி மாதத்தின் சிறப்புகளை பற்றி இந்த ஆன்மீக செய்தி…

3 hours ago

IND vs NZ : 2-வது டெஸ்ட் போட்டி..! காயம் மீண்டு களமிறங்கும் ரிஷப் பண்ட்?

புனே : இந்தியா, நியூஸிலாந்து அணிகளுக்கு இடையே 3 போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரானது நடைபெற்று வருகிறது. இதில்,முன்னதாக நடைபெற்ற…

3 hours ago