யமுனை ஆற்றில் மிதக்கும் இறந்த உடல்கள்…! பீதியில் உறைந்த மக்கள்…!

Default Image

யமுனை ஆற்றில் மிதக்கும் இறந்த சடலங்களால் பீதியில் ஆழ்ந்துள்ள, குடியிருப்புவாசிகள்.

இந்தியாவில் கொரோனா வைரசின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், உத்தரப்பிரதேசத்தில் இந்த வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் ஹமீர்பூரில் உள்ள யமுனை ஆற்றில், இறந்த உடல்கள் பல மிதப்பதால் அப்பகுதியில் வாழும் உள்ளூர்வாசிகள் பீதியடைந்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து அப்பகுதியில் வசிக்கும் குடியிருப்பாளர்கள் கூறுகையில், சடலங்கள் கொடிய கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட கிராமவாசிகளின் உடல்கள் என்றும், இறந்த உடல்களை தகனம் செய்வதற்கு இடங்கள் இல்லாத சூழலில் இவ்வாறு சடலங்கள் தூக்கி எரியப்பட்டுள்ளதாகவும் உள்ளூர்வாசிகள் சந்தேகிக்கின்றனர்.

இதுகுறித்து, ஹமீர்பூர் உதவி போலீஸ் சூப்பிரண்ட் அனூப் குமார் சிங் கூறுகையில், யமுனா நதி ஹமீர்பூருக்கும், கான்பூருக்கும் இடையிலான எல்லையாக பாய்கிறது. உள்ளூர்வாசிகள் இந்த நதியை புனிதமான ஒன்றாக கருதுகின்றனர். மேலும் இறந்த கிராமவாசிகளின் உடல்கள் ஆற்றில் மிதக்க விடுவது ஒரு பழமையான சடங்கு என தெரிவித்துள்ளார்.

மேலும், இதுபோன்ற ஒரு சம்பவம் பீகாரிலும் நடைபெற்றுள்ளது. பீகார் மாநிலம் கதிஹாரில் இருந்து கோவிட் பாதிக்கப்பட்டவர்களின் உடல்கள் ஆறுகளில் கொட்டப்பட்ட ஒரு அதிர்ச்சியான சம்பவம் நிகழ்ந்துள்ளதாகவும்,  மருத்துவமனை ஊழியர்கள் உடல்களை ஆற்றில் கொட்டுவது குறித்து விசாரிக்க விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்