கோவிஷீல்டு, கோவாக்சன் கொரோனா தடுப்பூசிகளுக்கு அனுமதி வழங்கியது இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு.
இந்தியாவில் பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள கோவாக்சின், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் புனே சீரம் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள கோவிஷீல்டு, ஃபைசர் நிறுவனம் தயாரித்துள்ள மற்றோரு தடுப்பூசி ஆகிய 3 நிறுவனங்கள் தடுப்பூசி தயாரிப்பில் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.இந்த ஆண்டு கொரோனா தடுப்பூசி அனைத்து மக்களுக்கும் வழங்க அரசு முடிவு செய்துள்ளது.
ஆகவே அவசர கால பயன்பாட்டிற்கு ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் கோவிஷீல்ட் கொரோனா தடுப்பு மருந்துக்கு ஒப்புதல் தர மத்திய அரசுக்கு, மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு பரிந்துரை செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.மேலும் உள்நாட்டு தயாரிப்பான பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள கோவாக்சின் கொரோனா தடுப்பூசியை அவசரகால தேவைக்கு பயன்படுத்தலாம் என்று மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டது.
இந்நிலையில் இன்று இது குறித்து இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டு அதிகாரி சோமணி செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,ஆக்ஸ்போர்டு – சீரம் இணைந்து தயாரிக்கும் கோவிஷீல்ட் மற்றும் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசிகளுக்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
சென்னை : கடல் வளத்தை பாதுகாக்கும் வகையிலும், அதுகுறித்த விழிப்புணர்வு ஏற்படும் வகையிலும் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் கடந்த…
ஹைதிராபாத் : கடந்த 2024 சீசனில், சன்ரைசர்ஸ் ஹைதிராபாத் அணி தனது அதிரடியான பேட்டிங்கால் எதிரணி பவுலர்களை கதிகலங்க செய்தது.…
சென்னை : கிரிக்கெட் உலகில் சில வீரர்களுக்கு அணி என்பது வெறும் விளையாட்டுகானது மட்டுமல்ல. சிலருக்கு அது ஒரு குடும்பம்…
கொல்கத்தா : கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும் சமயத்தில் சில ரசிகர்கள் ஆர்வ மிகுதியில் மைதானத்தில் உள்ள பாதுகாப்பை மீறி தங்கள்…
டெல்லி : கடந்த மார்ச் மாதம் 14ஆம் தேதி டெல்லியில் உயர்நீதிமன்ற நீதிபதி வீட்டில் நடந்த தீ விபத்து சம்பவம்,…
சென்னை : ஐபிஎல் கிரிக்கெட் ரசிகர்கள் எதிநோக்கும் மிக முக்கிய போட்டியான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ்…