வாழ்க தமிழ் , வாழ்க கலைஞர், வாழ்க பெரியார் என தமிழில் கூறி பதவியேற்ற தயாநிதி!
நேற்று மக்களைவையின் இடைக்கால சபாநாயகராக பாஜக எம்பி வீரேந்திரகுமார் நியமனம் செய்யப்பட்டார்.இதன் பின்னர் 17-வது மக்களவையின் முதல் கூட்டத் தொடர் நடைபெற்றது.நேற்று எம்.பி.கள் பதவி ஏற்ற நிலையில் இன்றும் எம்.பி.கள் பதவி ஏற்பு விழா நடைபெற்றது.
இந்நிலையில் இன்று தமிழில் ஜெயக்குமார், கலாநிதி வீராச்சாமி, தமிழச்சி தங்கபாண்டியன் , தயாநிதி மாறன் உள்ளிட்டோர் தமிழில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டார்.அப்போது வாழ்க தமிழ் , வாழ்க கலைஞர், வாழ்க பெரியார் என்று தயாநிதி மாறன் கூறினார்.