நம்மை சிற்பங்களாய் செதுக்கிய ஆசான்களின் தினம்! இதன் சிறப்பம்சம் என்ன?

Published by
லீனா

ஆசிரியர் தினம் என்பது நமக்கு கல்வி கற்று கொடுத்த ஆசிரியர்களுக்கு நன்றி கூறும் வண்ணமாக கொண்டாடப்படும் நாள் தான் இது. இந்த தினம் உருவாக காரணமாக இருந்தவர், நமது நாட்டின் முன்னாள் குடியரசு தலைவர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் தான்.

இவரது பிறந்த நாளான செப்.5-ம் தேதியை மாணவர்கள் மற்றும் மாணாக்கர்கள் கொண்டாட வேண்டும் என விரும்பிய போது, அந்த நாளை ஆசிரியர் தினமாக கொண்டாடுமாறு அவர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். அதன்படி, செப்.5 தேதி ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

நீ சிறகுகளோடு பிறந்திருக்கிறாய் 

ஆகவே ஊர்ந்து செல்லாதே 

அவற்றை உபயோகப்படுத்து!

கற்றுக் கொண்டு

மேலும் மேலும் பறந்து கொண்டே போ!

நாம் பிறந்தது சிறகுகளோடு, ஆனால், நாம் எவ்வாறு எங்கு பறந்து சென்றால், வெற்றி என்னும் சிகரத்தை அடைய முடியும் என்பதை நமக்கு கற்றுக் கொடுத்தவர்கள் நமது ஆசிரியர்கள். நம்மை கருவில் சுமந்து பெற்று வளர்த்தது நமது பெற்றோர்களாக இருக்கலாம்.

ஆனால், நம் வாழ்வு வளம் பெற நம்மை சிறந்த சிற்பிகளாக செதுக்கிய, ஆசான்கள் தான் நமது ஆசிரியர்கள். நம்மை பெற்ற பெற்றோருக்கு எவ்வளவு மதிப்பும், மரியாதையும் கொடுக்கின்றோமோ அது போல அவர்களுக்கும் நாம் மரியாதை கொடுக்க வேண்டும். இந்த ஆசிரியர்களின் சிறப்பை உணரும் வண்ணமாக தான் ஒவ்வொரு ஆண்டும் செப்.5-ம் தேதி ஆசிரியர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இன்று நமது வளர்ச்சியில், பலரும் பொறாமைப்படுவது உண்டு. ஆனால், அவன்(ள்) வளர்ந்துவிட்டானே என, நமது வளர்ச்சியை கண்டு பொறாமைப்படாத ஒரே ஜீவன் நமது ஆசிரியர்கள் மட்டும் தான். இப்படிப்பட்ட நமது ஆசிரியர்களை நமது வாழ்வில், நாம் எந்த உச்சத்திற்கு சென்றாலும் மறக்க கூடாது.

Published by
லீனா

Recent Posts

என்னுடைய மனைவி தான் தூண்…பத்மபூஷன் விருது வாங்கிய அஜித் எமோஷனல்!

டெல்லி : இந்த ஆண்டுக்கான (2025) பத்ம பூஷன் விருது கடந்த ஜனவரி 25-ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு யாருக்கெல்லாம்…

25 minutes ago

KKRvsDC : வெற்றிப்பாதைக்கு திரும்புமா டெல்லி? டாஸ் வென்று பந்துவீச்சு தேர்வு!

டெல்லி : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகிறது. இந்த…

1 hour ago

நடராஜனுக்கு வாய்ப்பு கொடுக்காதது ஏன்? மனம் திறந்த கெவின் பீட்டர்சன்!

டெல்லி : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் டெல்லி அணி சிறப்பாக விளையாடி வந்தாலும் ரசிகர்களுக்கு இருக்கும் மிகப்பெரிய கவலைகளில் ஒன்று என்னவென்றால்,…

3 hours ago

“நாம் நமக்குள் சண்டையிடாமல் ஒற்றுமையாக இருப்போம்!” அஜித்குமார் வேண்டுகோள்!

டெல்லி : நடிப்பு , கார் பந்தயம் ஆகிய துறைகளில் சிறந்து விளங்கும் அஜித்குமாருக்கு பத்மபூஷன் விருது வழங்கி மத்திய…

3 hours ago

கனடா தேர்தல் : 22 பஞ்சாபியர்கள், 2 ஈழ தமிழர்கள் வெற்றி!

ஒட்டாவா : 343 தொகுதிகளை கொண்ட கனடா நாடாளுமன்றத்திற்கு நேற்று தேர்தல் நடைபெற்றது. அமெரிக்காவை போலவே கனடாவிலும் தேர்தல் வாக்கெடுப்பு…

3 hours ago

2026ல் அதிமுகவுக்கு 6 இடங்கள் கூட கிடைக்காது -ஆர்.எஸ்.பாரதி காட்டம்!

சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் காவல்துறை, தீயணைப்புத்துறை மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது…

3 hours ago