கேரள தங்கக் கடத்தல் வழக்கு ! தாவூத் இப்ராஹிமின் கும்பலுக்கு தொடர்பு
கேரள தங்கக் கடத்தல் வழக்கில் பயங்கரவாதி தாவூத் இப்ராஹிமின் கும்பலுக்கு தொடர்பு இருந்திருக்கலாம் என்று தேசிய புலனாய்வு அமைப்பு (National Investigation Agency) நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு எமிரேட் தூதரகத்திற்கு வந்த பார்சலில் 30 கிலோ தங்கக் கடத்தல் வழக்கு தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) விசாரணை நடத்தி முக்கிய குற்றவாளிகளான ஸ்வப்னா சுரேஷ் , சந்தீப் சிங் உள்ளிட்டோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த தங்கக் கடத்தல் வழக்கு தொடர்பாக , அமலாக்கத்துறை , சுங்கத்துறை மற்றும் என்ஐஏ தனித்தனியாக வழக்கு பதிவு செய்துள்ளது.
இதனிடையே கேரள தங்கக் கடத்தல் வழக்கில் பயங்கரவாதி தாவூத் இப்ராஹிமின் கும்பலுக்கு தொடர்பு இருந்திருக்கலாம் என்றும் , பயங்கரவாத தொடர்பு குறித்து விசாரிக்க வேண்டும் என்று தேசிய புலனாய்வு அமைப்பு (National Investigation Agency) நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.கேரளாவில் தங்கக் கடத்தலில் இருந்து கிடைக்கும் பணம் இந்தியாவில் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்பட்டதாக புலனாய்வு அமைப்புகள் தகவல்கள் தெரிவிக்கின்றன.