கடந்த திங்கள்கிழமை மாலை மஹிம் கடற்கரையில் மஹிம் காவல் துறையினர் ஒரு சூட்கேஸில் கண்டுபிடித்தனர்.அந்த சூட்கேஸில் துண்டு துண்டாக வெட்டப்பட்ட நிலையில் ஒரு ஆண் சடலம் இருந்தது.பின்னர் மஹிம் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணையை நடத்தினர்.
போலீசார் கைப்பற்றிய சூட்கேஸுக்குள் இரண்டு சட்டைகள் , ஒரு ஸ்வெட்டர் மற்றும் ஒரு பேன்ட் ஆகியவற்றை போலீசார் கைப்பற்றினர். அதில் இருந்த ஒரு சட்டை குர்லா மேற்கில் பெல்காமி சாலையில் அமைந்துள்ள ஒரு தையல் கைடையில் தைத்தது தெரியவந்தது.
பின்னர் போலீசார் அந்த தையல் கடையில் சென்று விசாரித்த போது பென்னட் என்பவர் கையொப்பம் இட்டு இருந்தார்.இதை தொடர்ந்து போலீசார் சமூக ஊடகங்களில் பென்னட் பெயரை வைத்து தேடினர்.அப்போது சூட்கேஸில் காணப்பட்ட அதே மெரூன் ஸ்வெட்டரை பென்னட் அணிந்து ஒரு புகைப்படத்தை பதிவிட்டு இருந்தார்.
பேஸ்புக்கில் பென்னட்டின் முகவரி பற்றிய விவரங்கள் கிடைத்தது. அதைவைத்து விசாரணை நடத்தியதில் பென்னட் ஒரு நகர இசைக்கலைஞர் என தெரிந்தது.ஆனால் பென்னட்டின் வீடு பூட்டப்பட்டிருந்தது. மேலும் அந்த வீட்டில் பென்னட் அவர் 19 வயது வளர்ப்பு மகளுடன் அங்கு வசித்து வந்ததாக உள்ளூர்வாசிகள் தெரிவித்தனர்.
பின்னர் ரியா பென்னட் ரீபெல்லோ என்றும் அழைக்கப்படும் அவரது வளர்ப்பு மகள் , அவரது 16 வயது காதலன் ஆகியோரை போலீசார் கண்டுபிடித்து அவர்களிடம் விசாரணை நடத்தினர்.
அப்போது மகள் ரியா தனது தந்தை பென்னட் கனடாவில் இருப்பதாக அவர் முதலில் கூறினார். அதன் பின்னர் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல் வெளியானது. விசாரணையில் ரியாவிடம் கூறுகையில் , தனது தந்தை பென்னட் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததால் தனது காதலனின் உதவியுடன் அவரைக் கொன்றதாக ஒப்புக்கொண்டார்.
கடந்த நவம்பர் 26 அன்று பென்னட்டை ஒரு மூங்கில் குச்சியால் தாக்கி உள்ளனர்.பின்னர் அவரைக் குத்திக் கொலை செய்து சடலத்தை சாண்டா குரூஸ் பிளாட்டில் மூன்று நாட்கள் தங்களுடன் வைத்து இருந்ததாகவும் ,பின்னர் உடலை துண்டுகளாக வெட்டி சூட்கேஸில் வைத்து ஆற்றில் வீசியதாக கூறினார்.
ரியா மற்றும் அவரது காதலன் கைது செய்து போலீசார் மேலும் விசாரணை நடந்து வருகின்றனர்.
லக்னோ : பொதுவாகவே லக்னோ அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா ஒரு போட்டியில் அணி தோல்வி அடைந்தாள் கூட மிகவும்…
சென்னை : பகுஜன் சமாஜ் கட்சியின் (பிஎஸ்பி) தமிழ்நாடு மாநில ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி நீக்கப்பட்டுள்ளார். ஆம்ஸ்ட்ராங்…
டெக்ஸாஸ் : வரலாற்றில் முதல் முறையாக, பெண்கள் மட்டுமே அடங்கிய ஆறு பேர் கொண்ட குழு, புளூ ஒரிஜின் (Blue…
சென்னை : கடந்த ஏப்ரல் 10ஆம் தேதி முதல் நேற்று (ஏப்ரல் 14) வரை 5 நாட்கள் தொடர் விடுமுறையை…
சென்னை : தனுஷ் நடிப்பில் உருவான புதுக்கோட்டையிலிருந்து சரவணன், ஸ்ரீகாந்த், ஸ்னேகா நடித்த ஏப்ரல் மாதத்தில் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கி…
சென்னை : திருவள்ளூர் மாவட்டம் முதல் கன்னியாகுமரி மாவட்டம் வரை தமிழக கடற்கரையோர எல்லை பகுதியில் மீன்களின் இனப்பெருக்க காலத்திற்காக…