தர்ஷன் வீடியோ விவகாரம் – சிறை மாற்றம்.. 7 அதிகாரிகள் சஸ்பெண்ட்!
கர்நாடகா : சிறையிலிருந்து வீடியோ காலில் பேசிய விவகாரத்தில், கன்னட நடிகர் தர்ஷன் வேறு சிறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
கன்னட சினிமாவின் முன்னணி நடிகரான தர்ஷன், ரேணுகாசாமி என்பவரை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கன்னட நடிகர் தர்ஷன், தூகுதீபா பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
ரேணுகாசாமி கொலை வழக்கில் தற்போது தர்ஷன் மற்றும் அவரது தோழி பவித்ரா கவுடா உட்பட மொத்தம் 17 பேர் நீதிமன்ற காவலில் உள்ளனர். இந்த நிலையில், சிறையில் கன்னட நடிகர் தர்ஷன், கையில் சிகரெட் மற்றும் டீ கோப்பையுடன் தனது நண்பர்களோடு உரையாடும் இருக்கும் வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அது மட்டும் இல்லாமல், அவர் வீடியோ கால் பேசுவது போல் இருக்கும் வைரல் புகைப்படம் ஒன்றும் சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த புகைப்படங்களை வைத்து பார்க்கும் பொழுது, சிறையில் அவர் ஒரு விஐபி போல், சொகுசாக வாழ்ந்து வருவதாக தெரிகிறது.
இந்த வைரலான புகைப்படத்தை பார்த்த இறந்த ரேணுகாசாமியின் தந்தை விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
சிறைக்கு மாற்றம்
தற்பொழுது, வீடியோ காலில் பேசிய காணொலி வெளியான நிலையில், கன்னட நடிகர் தர்ஷனை பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் இருந்து அவரை வேறு சிறைக்கு மாற்ற கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையா உத்தரவிட்டுள்ளார்.
மேலும், இவ்வாறான சலுகைக்கு உடந்தையாக இருந்த, பரப்பன அக்ரஹாரா சிறையின் ஜெயிலர் உட்பட 7 அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்து கர்நாடக சிறைத்துறை அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.