சஸ்பெண்ட் நடவடிக்கைக்கு எதிராக நாடாளுமன்ற வளாகத்தில் 8 எம்.பி.க்கள் நடத்தி வந்த தர்ணா போராட்டம் வாபஸ்.
மாநிலங்களவையை புறக்கணிப்பதாக எதிர்க்கட்சிகள் அறிவித்ததை அடுத்து தர்ணா போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. பா.ஜ.க அரசு கொண்டு வந்துள்ள வேளாண் விளைபொருள் வர்த்தக மசோதா, விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்கும் உத்தரவாத மசோதா மற்றும் அத்தியாவசிய பொருட்கள் திருத்த மசோதாக்கள் விவசாயிகளுக்கு எதிரானவை கூறி, எதிர்கட்சி எம்.பிக்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த 3 மசோதாக்கள் மக்களவையில் நிறைவேற்றப்பட்ட நிலையில், அத்தியாவசிய பொருட்கள் திருத்த மசோதா தவிர 2 மசோதாக்கள் மாநிலங்களவையில் நேற்று முன்தினம் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதவுக்கு எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து, கடும் அமளில் ஈடுபட்டனர். அவை வரம்பை மீறியதாக கூறி, அமளியில் ஈடுபட்ட 8 எதிர்க்கட்சி எம்.பி.க்கள் ஒருவாரம் இடை நீக்கம் செய்வதாக தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்திருந்தார்.
இதையடுத்து, விடிய விடிய நாடாளுமன்ற வளாகத்தில் அமர்ந்து 8 எம்.பிக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. காலையில், தர்ணா போராட்டத்தில் ஈடுப்பட்ட எம்.பிக்களுக்காக மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ் டீ கொண்டு வந்து கொடுத்தார். அந்த டீயை சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்.பி.க்கள் வாங்க மறுத்துள்ளனர். இந்நிலையில், சஸ்பெண்ட் நடவடிக்கைக்கு எதிராக 8 எம்.பி.க்கள் நடத்தி வந்த தர்ணா போராட்டம் தற்போது வாபஸ் பெறப்பட்டுள்ளது.
சென்னை :அம்மை நோய் வந்தால் வீட்டில் செய்ய வேண்டியதும் செய்யக்கூடாததையும் பற்றியும் இந்த செய்தி குறிப்பில் தெரிந்து கொள்வோம். அம்மை…
சென்னை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை புயலாக மாறும் எனவும், இந்த…
சென்னை : அடுத்த ஆண்டு மார்ச் மாதம் ஐபிஎல் 2025 தொடரானது தொடங்கவுள்ளது. இந்த தொடர் மார்ச்-14 ம் தேதி…
சென்னை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், நாளை புயலாக உருமாறும் என வானிலை…
சென்னை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை புயலாக மாறும் என்று இந்திய…
சென்னை : வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியானது வலுவடைந்து உள்ளதால், நாளை புயலாக மாற வாய்ப்புள்ளது என இந்திய…