ஆளுநருக்கு எதிராக 6 மணிநேரமாக தர்ணா!!போராட்டம் தொடரும்!! நாராயணசாமி உறுதி

Default Image

புதுச்சேரியில் ஆளுநர் கிரண்பேடிக்கு எதிராக நாளை முழு அடைப்பு போராட்டத்திற்கு காங்கிரஸ் அழைப்பு விடுத்துள்ளது.

பிப்ரவரி 11ம் தேதி முதல் புதுச்சேரியில் இருசக்கர வாகனத்தில் பயணிப்போர் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று ஆளுநர் கிரண்பேடி உத்தரவின்பேரில் டி.ஜி.பி சுந்தரி நந்தா அறிவித்திருந்தார்.

ஆனால் ஹெல்மெட் தலைக்கவசம் அணிவது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும், உடனே அபராதம் கூடாது என்று முதல்வர் நாராயணசாமி  தெரிவித்திருந்தார். இந்த அறிவிப்பை ஆளுநர் ஏற்கவில்லை.இந்நிலையில்  முதலமைச்சரின் விருப்பத்திற்கு எதிராக ஆளுநர் செயல்படுவதாக கூறி அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமி அதிருப்தியடைந்தார்.

 

இதனால் கருப்பு சட்டை அணிந்து ஆளுநர் மாளிகைக்கு எதிரே தர்ணாவில் ஈடுபட்டார்.  அதேபோல் கிரண்பேடியை கண்டித்து 68 மணிநேரத்துக்கும் மேலாக நாராயணசாமி தர்ணாவில் ஈடுபட்டுள்ளார்.தர்ணாவில் இருந்துகொண்டே  அரசுப் பணிகளை கவனிக்கிறார். அரசு கோப்புகளை பார்த்து கையெழுத்திட்டு வருகிறார்.

பின்னர்  கோரிக்கை கடிதம் குறித்து நேரடியாக ஆலோசனை நடத்துவதற்கு வரும் 21-ம் தேதி காலை 10 மணிக்கு வரும்படி புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமிக்கு, துணை நிலை கிரண்பேடி கடிதம் எழுதியுள்ளார்.அதேபோல்  கடிதம் குறித்து பரிசீலிப்பதற்கு போதிய அவகாசம் கொடுக்காமல், தங்களது அமைச்சரவை சகாக்களுடன் தர்ணாவில் ஈடுபட்டுள்ளது சட்டத்திற்கு புறம்பானது என்றும் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

மேலும் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி கூறுகையில், எங்களுடைய கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும்.தங்களுடைய கோரிக்கை தொடர்பாக 6-ம் தேதி கடிதம் கொடுத்துள்ளோம் என்று புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

அதேபோல் புதுச்சேரியில் ஆளுநர் கிரண்பேடிக்கு எதிராக நாளை முழு அடைப்பு போராட்டத்திற்கு காங்கிரஸ் அழைப்பு விடுத்துள்ளது. புதுச்சேரி மாநில காங்கிரஸ் தலைவர் நமசிவாயம் அழைப்பு விடுத்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்