திருமண மேடையில் புஷ் – அப் : இளம் ஜோடிகளுக்கு குவியும் பாராட்டு…!
டெல்லியை சேர்ந்த தம்பதிகள் தங்கள் திருமண நிகழ்வின் பொழுது மணக்கோலத்துடன் புஷ்-அப் செய்தது பலரது பாராட்டையும் பெற்றுள்ளது.
டெல்லியிலுள்ள குர்கான் பகுதியில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு கோலாகலமாக திருமணம் ஒன்று நடைபெற்றுள்ளது. இந்த திருமண நிகழ்வின் பொழுது உடற்பயிற்சியாளராகிய மணப்பெண் அக்ஷிதா மற்றும் அவரது கணவர் ஆதித்யா ஆகிய இருவரும் மணமேடையில் புஷ் அப் செய்து காண்பித்துள்ளனர்.
மணமக்கள் இருவரும் மணக்கோலத்தில் இவ்வாறு செய்தது அங்கு கூடி வந்திருந்தவர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இது குறித்த வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதோ அந்த வீடியோ,
View this post on Instagram