டேனிஷ் சித்திகி தாக்குதலில் இறக்கவில்லை… அடையாளம் கண்டு தாலிபான்களால் கொடூரமாக கொல்லப்பட்டார்!
டேனிஷ் சித்திகி மோதலின்போது நடந்த துப்பாக்கி சூட்டில் இறந்ததாக கூறப்பட்ட நிலையில், தற்போது அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் உள்ள ராய்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் தலைமை புகைப்பட செய்தியாளரான 38 வயதான டேனிஷ் சித்திகி, இரு வாரங்களுக்கு முன்பு ஆஃப்கானிஸ்தான் மோதல்களை படம்பிடிக்க சென்றிருந்தார். கந்தஹார் நகரின் ஸ்பின் போல்டாக் மாவட்டத்தில் ஆப்கானிஸ்தான் படைகளுக்கும் தலிபான்களுக்கும் இடையே நடந்த மோதல்களின்போது சித்திகி இறந்ததாக கூறப்பட்டது.
பாகிஸ்தான் எல்லை சாவடி அருகே தாலிபன்கள் உடனான சண்டையில் ஈடுபட்டிருந்த ஆப்கன் படைகளுடன் சித்திகி இருந்ததாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில், புலிட்சர் விருது பெற்ற இந்திய புகைப்பட நிரூபர் டேனிஷ் சித்திகி, ஆப்கானிஸ்தானில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்படவில்லை என்றும் அவரது அடையாளத்தை தெரிந்த பின்னர் தலிபான்களால் “கொடூரமாக கொலை செய்யப்பட்டார்” எனவும் அமெரிக்க பத்திரிகையில் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாஷிங்டன் எக்ஸாமினர் அறிக்கையின்படி, சித்திக் ஆப்கானிஸ்தான் இராணுவக் படையுடன் சேர்ந்து ஸ்பின் போல்டாக் பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது அங்கு இருந்த தலிபான்கள் இரு அணிகளாக பிரிந்துள்ளனர். சித்திகி மற்றும் அவருடன் இருந்த 3 ஆப்கானிஸ்தான் படை வீரர் மீது தலிபான்கள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் ஏற்பட்ட காயம் காரணமாக சித்திகி உள்ளூர் மசூதி ஒன்றில் முதலுதவி பெற்றுக் கொண்டிருந்தார்.
மசூதியில் இருக்கும் தகவலை அறிந்த தாலிபான்கள், சித்திகிகை மீண்டு பிடித்து, அவரது அடையாளத்தை உறுதி செய்து கொண்டு, அவரை தலையில் தாக்கியதோடு, அவரது உடலை குண்டுகளால் துளைத்துள்ளனர். ஆனால், உள்ளூர் விசாரணையில், சித்திகி அங்கு இருப்பதால் தலிபான்கள் மசூதியைத் மட்டும் தாக்கியதாக கூறினர்.
மசூதியில் தலிபான்கள், சித்திகிகை பிடித்த போது அவர் உயிருடன் இருந்ததாகவும், சித்திக்கின் அடையாளத்தை சரிபார்த்து பின்னர் அவரையும், அவருடன் இருந்த வீரர்களையும் தூக்கிலிட்டதாக கூறப்படுகிறது. அவரை காப்பாற்ற முயன்றபோது ஆப்கானிஸ்தான் படை தளபதியும் அவரது குழுவின் மீதமுள்ளவர்களும் உயிரிழந்தனர் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்படுகிறது.
பொது வெளியில் வெளியிடப்பட்ட புகைப்படத்தில் சித்திகியின் முகம் அடையாளம் தெரியும்படி இருந்தாலும், கிடைத்த வேறு புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கல் மூலம் அவரை துண்புறுத்தி கொலை செய்துள்ளது தெரியவந்துள்ளது என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. முன்னதாக டேனிஷ் சித்திகி மோதலின் போது நடந்த துப்பாக்கி சூட்டில் இறந்ததாக கூறப்பட்ட நிலையில், தற்போது தலிபான்களால் கொடூரமாக கொல்லப்பட்டுள்ளார் என அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது.