மகாராஷ்டிராவில், கடந்த ஆண்டு முதல் இதுவரை 52 பேர் இந்த கருப்பு பூஞ்சை நோய் தாக்கி பலியாகியுள்ளதாக மாநில சுகாதாரத் துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோர் மற்றும் அதில் இருந்து மீண்டவர்கள் சிலர் மியூக்கோர்மைகோசிஸ் என்ற கருப்பு பூஞ்சை நோய்க்கு ஆளாகி வருகின்றனர்.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அதில் இருந்து மீண்டவர்கள் அதிகப்படியான ஸ்டீராய்டு மருந்துகள் கொடுக்கப்படுவதால் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து இந்த நோய் தாக்குவதாக கூறப்படுகிறது. தலைவலி, காய்ச்சல், சைனஸ் மண்டலத்தில் பாதிப்பு, கண்களுக்கு கீழ் வலி மற்றும் பகுதி அளவில் பார்வை குறைபாடு போன்ற பிரச்சினைகள் இந்த பூஞ்சை பாதிப்புக்கு முக்கியமான அறிகுறியாகும்.
இந்தியாவில் தொற்று அதிகமாக காணப்படும் மகாராஷ்டிராவில், கடந்த ஆண்டு முதல் இதுவரை 52 பேர் இந்த கருப்பு பூஞ்சை நோய் தாக்கி பலியாகியுள்ளதாக மாநில சுகாதாரத் துறை அதிகாரி தெரிவித்துள்ளார். மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன், கருப்பு பூஞ்சை நோயை எவ்வாறு கண்டறிவது மற்றும் தடுப்பது குறித்த பயனுள்ள உதவிக்குறிப்புகளை தனது ட்வீட்டர் பக்கத்தில் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
ராமேஸ்வரம் : பிரதமர் நரேந்திர மோடி இன்று, ராமேஸ்வரத்தில் பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறந்து வைத்தார். இது இந்தியாவின்…
சென்னை : கடந்த 2-3 சீசன்களாக தோனியின் முழங்கால் பிரச்சினைகள், அவர் தொடர்ந்து பேட்டிங்கிற்கு தாமதமாக வருவது மற்றும் அவரது…
கொச்சி : கேரளாவின் பெரும்பாவூரில் ஒரு தனியார் நிறுவன ஊழியர் தரையில் வைக்கப்பட்ட கிண்ணத்தில் இருந்து விலங்குகளைப் போல தண்ணீர்…
ராமேஸ்வரம் : நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார். பாம்பனில் கடலுக்கு நடுவே…
ராமேஸ்வரம் : நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார். பாம்பனில் கடலுக்கு…
சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…