மாணவர்களை கவர்ந்திழுத்த டான்சிங் சார்! இந்த வாத்தியாரிடம் அப்படி என்ன திறமை உள்ளது!

Default Image

ஒடிசா மாநிலம் கோராபுட் மாவட்டம், லம்தாபுத் கிராமத்தில் ஒரு அரசு ஆரம்பப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியின் தலைமை ஆசிரியராக பிரபுல்லா குமார் பதி பணி புரிகிறார். இந்த தலைமை ஆசிரியர் மாணவர்களுக்கு பாடம் சொல்லி கொடுப்பதில் புதிய யுக்தியை கையாள்கிறார்.

இந்த தலைமை ஆசிரியர் மாணவர்களிடையே படிக்கும் ஆர்வத்தை தூண்டும் வகையில், நடனம் மற்றும் இசை வடிவில் மாணவர்களுக்கு படங்களை கற்பிக்கிறார். இவரது இந்த செயல் மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இவரது இந்த செயலால் கவர்ந்திழுக்கப்பட்ட மாணவர்களும், பெற்றோர்களும் அவரை ‘டான்சிங் சார்’ என்று அழைக்கின்றனர். இதுகுறித்து பிரபுல்லா குமார் பதி அவர்கள் கூறுகையில், பாட்டு பாடி, நடனம் ஆடியபடி வேடிக்கைகையுடன் பாடம் சொல்லி கொடுப்பதை மாணவர்கள் விரும்புவதாகவும், இதனால் பள்ளிக்கு வருவதை மாணவர்கள் அதிகமாக விரும்புவதாகவும் கூறியுள்ளார்.

மேலும், இவர் இந்த சிறந்த யுக்தியை 2008-ம் ஆண்டு முதல் பின்பற்றி வருவதாக கூறியுள்ளார். இதுகுறித்த வீடியோவை அவர் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இவரது இந்த செயலுக்கு பலரும் பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்