கர்நாடகாவில், கொரோனா வார்டில் தினமும் 30 நிமிடங்கள் திரைப்பட பாடலுக்கு நடனமாட அனுமதி.
இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இந்த வைரஸால், இதுவரை இந்தியாவில் 257,486 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 7,207 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்றும் பணியில், மருத்துவர்கள், காவல்துறையினர் மற்றும் தூய்மை பணியாளர்கள் முழு அர்ப்பணிப்புடன் இறங்கியுள்ளனர்.
இந்நிலையில், கர்நாடகா மாநிலத்தில், கொரோனா வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிற நிலையில், மருத்துவர்கள் தங்களது வீடுகளுக்கு திரும்ப இயலாமல், மருத்துவமனையிலேயே இருந்து பணிபுரிந்த வருகின்றனர்.
இதனையடுத்து, இவ்வாறு பணிபுரியும் மருத்துவர்கள் மற்றும் பணியாளர்கள் கடும் மன அழுத்தத்திற்கு ஆளாவதால், அவர்களை உற்சாகப்படுத்தும் விதத்தில், கொரோனா வார்டில் தினமும் 30 நிமிடங்கள் திரைப்பட பாடலுக்கு நடனமாட அனுமதி அளித்துள்ளது.
தென்காசி : கடந்த நவ-20 (புதன்கிழமை) இரவு முழுவதும் இடைவிடாது கனமழை பெய்தது. தொடர்ந்து பெய்த கனமழையின் காரணமாக தென்காசி…
சென்னை : இன்று (நவம்பர் 22) சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக…
டெல்லி : உலகளவில் பெரும்பாலான ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்களின் இணையவழி தேடல் எஞ்சினாக செயல்பட்டு வருகிறது கூகுள் குரோம். இந்த…
சேலம் : பள்ளி மாணவர்களை பள்ளிகளில் வேலை வாங்கும் நிகழ்வுக்கு அவ்வபோது உயர் கல்வி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்,…
சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…