நடனமாடிய இந்திய கிரிக்கெட் வீரர்…!!

Published by
Dinasuvadu desk

கொல்கத்தா,

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனாக இருந்தவர் சவுரவ் கங்குலி.  இவர் வங்காள கிரிக்கெட் கூட்டமைப்பின் தலைவராகவும் இருந்து வருகிறார்.  வங்காள சேனல் ஒன்றில் குவிஸ் நிகழ்ச்சி ஒன்றை நடத்தி வரும் கங்குலி, பல்வேறு வர்த்தக விளம்பரங்களிலும் நடித்துள்ளார்.

இந்த நிலையில் அவர் இசை வீடியோ ஒன்றில் நடித்துள்ளார்.  ஜெய் ஜெய் துர்கா மா என்ற அந்த வீடியோவில் அவருடன் வங்காள நடிகைகளான சுபோஸ்ரீ கங்குலி மற்றும் மிமி சக்ரவர்த்தி ஆகியோரும் நடித்துள்ளனர்.  இந்த இசை வீடியோவை ராஜ் சக்ரவர்த்தி இயக்கி உள்ளார்.  ஜீத் கங்குலி இசை அமைத்துள்ளார்.

இதுபற்றி செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய கங்குலி, எதுவும் முதன்முறையில் நன்றாக இருக்கும்.  இந்த இசை வீடியோவில் எனது நடனம் இடம்பெற்றுள்ளது.  நான் அதிர்ஷ்டம் நிறைந்தவன்.  இயக்குனர் ராஜ் கடின நடன அசைவுகளை எனக்கு கொடுக்கவில்லை.  அவை அனைத்தும் சிறந்த நடனம் ஆடும் சுபோஸ்ரீ மற்றும் மிமிக்கு சென்று விட்டது என கூறினார்.

அவரின் படப்பிடிப்பு அனுபவம் பற்றி கூறும்பொழுது, ஒவ்வொரு சீன் எடுத்த பின்பும் அந்த வீடியோ பதிவை நான் திரும்ப கவனிப்பேன்.  ஏனெனில் அதில் முட்டாளாக நான் தெரிய கூடாது.

எனக்கு கிரிக்கெட் மற்றும் கமெண்ட்ரி புரியும்.  சிறிதளவுக்கு வர்த்தக விளம்பரங்கள் பற்றியும் புரியும்.  ஆனால் இசை வீடியோவின் தொழில் நுட்பங்கள் பற்றி, காட்சிகள் எடுப்பது பற்றி எனக்கு புரியவில்லை.  காட்சிகள் எடுத்த பின்னர் இது எனக்கு சிறந்த தருணம் என்று உணர்ந்தேன என கூறினார்.  இந்த வீடியோ விரைவில் வெளியிடப்படும்.கங்குலி ஆடிய இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகிறது.

DINASUVADU 

Published by
Dinasuvadu desk

Recent Posts

சென்னை, காஞ்சிபுரம் 10 மணி வரை இந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

சென்னை : தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல், தெற்கு ஆந்திர- வடதமிழக கடலோரப்பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு…

4 hours ago

தமிழகத்தில் வியாழன் கிழமை (26/12/2024) இங்கெல்லாம் மின்தடை!

கோவை : கலங்கல், பீடம்பள்ளி, பட்டணம், பாப்பம்பட்டி, அக்கநாயக்கன்பாளையம், பட்டணம்புதூர், பாப்பம்பட்டிப்பிரிவு, கண்ணம்பாளையம், நடுப்பாளையம் (ஒரு மண்டலம்), சின்ன குயிலி,…

4 hours ago

வந்தாச்சு விடாமுயற்சி அப்டேட்! முதல் பாடல் இந்த தேதியில் தான் வெளியீடு!

சென்னை : விடாமுயற்சி படத்திற்கான அப்டேட் எப்போது வெளியாகும் என்று தான் அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி மற்ற சில நடிகர்களின் ரசிகர்களும்…

4 hours ago

நான் தான் நம்பர் 1! டெஸ்ட் தரவரிசையில் அஸ்வின் சாதனையை சமன் செய்த பும்ரா!

சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா ஐசிசி தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்து அசதியுள்ள…

4 hours ago

பாலியல் வன்கொடுமை – த.வெ.க தலைவர் விஜய் கடும் கண்டனம்!

சென்னை : மாவட்டத்தில் கிண்டி பகுதியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வந்த மாணவி ஒருவர் இரண்டு பேரால் பாலியல் வன்கொடுமை…

5 hours ago

பாலியல் வன்கொடுமை- யார் இந்த ஞானசேகரன்? விசாரணையில் வந்த பகீர் தகவல்!

சென்னை : கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வரும் ஒரு மாணவனும், மாணவியும் பல்கலைக்கழக வளாகத்தில் ஒன்றாக அமர்ந்து பேசிகொண்டிருந்த…

5 hours ago