கொரோனாவை தோற்கடித்து வீடு திரும்பிய அக்காவை,தங்கை வரவேற்ற நடனம்..இணையத்தில் வைரல்.!
இந்தியாவில் பொறுத்தவரை, மகாராஷ்டிராவில் தான் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால் சில கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு அமலில் உள்ளது. அந்த வகையில் நேற்று ஒரே நாளில் 9,518 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3,10,455 ஆக அதிகரித்துள்ளது.
மகாராஷ்டிராவின் புனேவில் கொரோனா வைரஸை தோற்கடித்து தனது சகோதரி பாதுகாப்பாக வீடு திரும்பியபோது ஒரு சகோதரியின் சந்தோசம் அக்காவை மீண்டும் வரவேற்க மகிழ்ச்சியுடன் நடனமாடிய விதத்தில் அந்த வீடியோவில் தெளிவாகத் தெரிந்தது.
இணையத்தில் வைரலாகி வரும் ஒரு வீடியோ, உலகெங்கிலும் 14 மில்லியனுக்கும் அதிகமான மக்களைப் பாதித்த கொரோனா வைரஸ் நாவலில் இருந்து வெற்றிகரமாக மீண்ட ஒரு இளம் பெண் தனது மூத்த சகோதரியை வீட்டிற்கு வரவேற்பதைக் காட்டுகிறது.
நேற்று இந்த வீடியோவை ட்விட்டரில் ஐ.பி.எஸ் அதிகாரி தீபன்ஷு கப்ரா பகிர்ந்து கொண்டார். அதில் தனது மூத்த சகோதரி திரும்புவதற்காகக் காத்திருக்கிறார். அவர்கள் வீட்டிற்கு வரும் தெருவில் அவள் நடந்து வரும்பொழுது சில்லர் பார்ட்டி திரைப்படத்தின் ‘டாய் தை ஃபிஷ்’ என்ற பெப்பி பாடலை இசைக்க தொடங்கி . பின் உடன்பிறந்த இருவரும் சந்தோஷத்தில் உற்சாகமாக மகிழ்ச்சியான நடனம், அது அவர்களுது முகத்தில் ஒரு புன்னகையை ஏற்படுத்தியது தெரிகிறது.
Just Loved the #SistersDuet!❤️
A worthy welcome of Elder Sis, returned after defeating #CoronaVirus.No Pandemic can reduce a nanometer of smile, of any family that cherishes such Warmth, Love & Energy. pic.twitter.com/cTkUGT8RPw
— Dipanshu Kabra (@ipskabra) July 19, 2020
இந்த வீடியோவின் இறுதியில் அவரது குடும்பம் உற்சாகத்தில் ஆலாத்தி எடுத்து வரவேற்றன. இவரது குடும்பம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருந்து குணமடைந்து வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது, ஆனால் கடைசியாக இவர் சகதோரி தற்போது வீடு திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.