தற்போதைய நிலவரப்படி நாடு முழுவதும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 31,787 ஆகவும், உயிரிழப்பின் எண்ணிக்கை 1008 ஆகவும் உயர்ந்துள்ளது.
உலகளவில் சுமார் 200 நாடுகளில் பரவி இருக்கும் கொரோனா வைரசால் பாதிப்பும், உயிரிழப்பும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனால் பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. வைரஸ் பரவலை கட்டுப்படுத்த உலக நாடுகள் அனைத்தும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். கொரோனாவை கட்டுப்படுத்த ஒரே வழி, அதற்கு தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதுதான் என்றும் அதுவும் ஒரு வருடம் கால அவகாசம் ஆகும் எனவும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இதனால் உலக நாடுகள் அனைத்தும் கொரோனா வைரசுக்கு தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. தற்போதைய நிலவரப்படி உலகளவில் 31,53,666 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, 2,18,743 பேர் பலியாகியுள்ளனர். இதனிடையே பாதிக்கப்பட்டவர்களில் 9,64,896 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்கள் என்பது குறிப்பிடப்படுகிறது. உலகளவில் அதிகபட்சமாக அமெரிக்காவில் இதுவரை 10,35,765 பேர் பாதிக்கப்பட்டு, 59,266 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 1,42,238 பேர் குணமடைந்துள்ளார்கள்.
இந்நிலையில், இந்த வைரஸ் இந்தியாவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இதனால் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அப்படி இருந்து பாதிப்பு தினந்தோறும் உயர்ந்துகொண்டே செல்கிறது. தற்போதைய நிலவரப்படி நாடு முழுவதும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 31,787 ஆகவும், கொரோனாவுக்கு உயிரிழப்பின் எண்ணிக்கை 1008 ஆகவும் உயர்ந்துள்ளது. அதுமட்டுமில்லாமல் 7,797 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்கள் என்று மத்திய சுகாதாரத்துறை அமைப்பு தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 9,318 பேர் பாதிக்கப்பட்டு, 400 பேர் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : நடிகர் ஜெயம் ரவிக்கும் - ஆர்த்தி என்பவருக்கும் கடந்த 2009இல் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 2 குழந்தைகள்…
சென்னை : கிண்டி அரசு மருத்துவமனையில், வயிற்று வலி காரணமாக அனுமதிக்கப்பட்ட இளைஞர் உயிரிழந்ததால் பதற்றம் எழுந்துள்ளது. தீவிர சிகிச்சை…
டெக்ஸாஸ் : அமெரிக்காவின் தொழில்முறையிலான குத்துச்சண்டை போட்டி நடைபெற்று வருகிறது. இதில், இன்று நடைபெறும் போட்டியில் அமெரிக்காவின் முன்னாள் ஹெவி…
சென்னை : கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் இன்று ஒரு இளைஞர் வயிற்று வலியால் உயிரிழந்த சம்பவம்…
சென்னை : கடந்த சில நாட்களாக உச்சம் தொட்டு வந்த தங்கத்தின் விலை தற்போது மீண்டும் சற்று உயர்ந்துள்ளது. தொடர்ந்து…
கொழும்பு : இலங்கையில் நிலவிய மோசமான பொருளாதர சூழலை அடுத்து ஜனாதிபதி, பிரதமர் பதவி விலகிய நிலையில், நாட்டின் புதிய…