தலித் இளைஞர் தாக்கப்பட்ட விவகாரம்! இரண்டு காவல்துறை அதிகாரிகள் பணியிடை நீக்கம்!

Published by
லீனா

தலித் இளைஞர் தாக்கப்பட்ட விவகாரத்தில், அடித்த குற்றச்சாட்டில் எஸ்ஐ மற்றும் கான்ஸ்டபிளை இடைநீக்கம்.

ஆந்திராவின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள சீதானகரம் காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு, தலித் இளைஞர் பிரசாத் என்பவரை காவல்துறையினர் சரமாரியாக தாங்கி உள்ளனர். இதனால், படுகாயமடைந்த பிரசாத், ராஜமுந்திரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உள்ளூர் ஒய்.எஸ்.ஆர்.சி.பி தலைவரின் டிரக்கை நிறுத்தியதற்காக பிரசாத் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போது இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக, ஒரு சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் ஒரு கான்ஸ்டபிள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து பேட்டியளித்த பிரசாத், எனது உறவினர் ஞாயிற்றுக்கிழமை காலமானார். நாங்கள் இறுதி சடங்குகளைச் செய்து கொண்டிருந்தோம்.  அப்போது, ஒரு டிரக் எனது தெரு வழியாக செல்ல முயன்றது. கடைசி சடங்கு முறைகள் நடைபெற்று வருவதால், நானும் மற்ற மூன்று பேரும் மணல் டிரக்கின் இயக்கத்தை நிறுத்தினோம். நாங்கள் சடலத்தை அந்த இடத்திலிருந்து நகர்த்தும் வரை சிறிது நேரம் காத்திருக்குமாறு டிரக் டிரைவரிடம் கேட்டோம். இது வாக்குவாதத்திற்கு வழிவகுத்தது என தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த சம்பவம் நடந்த ஒரு நாள் கழித்து, சப்-இன்ஸ்பெக்டர் பொலிஸ் ஷேக் ஃபெரோஸ் ஷா, மேலும் இரண்டு கான்ஸ்டபிள்களுடன், என்னையும் மற்ற இருவரையும் காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்துச் சென்றார். எஸ்.ஐ தன்னை குத்தியதாகவும், பெல்ட் மூலம் தாக்கியதாகவும் பிரசாத் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக, எதிர்க்கட்சித் தலைவர் என்.சந்திரபாபு நாயுடு கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், இந்த விவகாரம் குறித்து ஆந்திர மாநில டிஜிபி விசாரணையைத் தொடங்கி, அந்த நபரை அடித்த குற்றச்சாட்டில் எஸ்ஐ மற்றும் கான்ஸ்டபிளை இடைநீக்கம் செய்துள்ளார்.

Published by
லீனா

Recent Posts

கூகுள் குரோம் பயனர்களே உஷார்! எச்சரித்த மத்திய அரசு! 

கூகுள் குரோம் பயனர்களே உஷார்! எச்சரித்த மத்திய அரசு!

டெல்லி : உலகளவில் பெரும்பாலான ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்களின் இணையவழி தேடல் எஞ்சினாக செயல்பட்டு வருகிறது கூகுள் குரோம். இந்த…

43 minutes ago

மாணவர்களை கால் அழுத்திவிட கூறிய ஆசிரியர்! சஸ்பெண்ட் செய்த கல்வி அதிகாரி!

சேலம் : பள்ளி மாணவர்களை பள்ளிகளில் வேலை வாங்கும் நிகழ்வுக்கு அவ்வபோது உயர் கல்வி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்,…

1 hour ago

நாளை தவெக தலைவர் விஜய் வைக்கும் விருந்து! யார் யாருக்கு தெரியுமா?

சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…

2 hours ago

“மீனவர்கள் ஆழ்கடலுக்குச் செல்ல வேண்டாம்” – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…

2 hours ago

அதானி குழுமத்திற்கு எதிராக ஆஸ்திரேலியாவில் ‘இனவெறி’ புகார்!

ஆஸ்திரேலியா : அதானி குழுமத்திற்கு இந்த வாரம் அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்க வழக்கறிஞர்கள் அளித்த லஞ்ச…

2 hours ago

இரண்டாம் முறையாக கர்ப்பமான சிம்பு பட நடிகை.! சனா கானுக்கு குவியும் வாழ்த்துக்கள்…

சென்னை : முன்னாள் பாலிவுட் நடிகையும், டிவி ரியாலிட்டி ஷோ 'பிக் பாஸ்' இன் மூலம் பிரபலமான சனா கான்…

2 hours ago