தலித் இளைஞர் தாக்கப்பட்ட விவகாரம்! இரண்டு காவல்துறை அதிகாரிகள் பணியிடை நீக்கம்!
தலித் இளைஞர் தாக்கப்பட்ட விவகாரத்தில், அடித்த குற்றச்சாட்டில் எஸ்ஐ மற்றும் கான்ஸ்டபிளை இடைநீக்கம்.
ஆந்திராவின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள சீதானகரம் காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு, தலித் இளைஞர் பிரசாத் என்பவரை காவல்துறையினர் சரமாரியாக தாங்கி உள்ளனர். இதனால், படுகாயமடைந்த பிரசாத், ராஜமுந்திரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
உள்ளூர் ஒய்.எஸ்.ஆர்.சி.பி தலைவரின் டிரக்கை நிறுத்தியதற்காக பிரசாத் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போது இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக, ஒரு சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் ஒரு கான்ஸ்டபிள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து பேட்டியளித்த பிரசாத், எனது உறவினர் ஞாயிற்றுக்கிழமை காலமானார். நாங்கள் இறுதி சடங்குகளைச் செய்து கொண்டிருந்தோம். அப்போது, ஒரு டிரக் எனது தெரு வழியாக செல்ல முயன்றது. கடைசி சடங்கு முறைகள் நடைபெற்று வருவதால், நானும் மற்ற மூன்று பேரும் மணல் டிரக்கின் இயக்கத்தை நிறுத்தினோம். நாங்கள் சடலத்தை அந்த இடத்திலிருந்து நகர்த்தும் வரை சிறிது நேரம் காத்திருக்குமாறு டிரக் டிரைவரிடம் கேட்டோம். இது வாக்குவாதத்திற்கு வழிவகுத்தது என தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த சம்பவம் நடந்த ஒரு நாள் கழித்து, சப்-இன்ஸ்பெக்டர் பொலிஸ் ஷேக் ஃபெரோஸ் ஷா, மேலும் இரண்டு கான்ஸ்டபிள்களுடன், என்னையும் மற்ற இருவரையும் காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்துச் சென்றார். எஸ்.ஐ தன்னை குத்தியதாகவும், பெல்ட் மூலம் தாக்கியதாகவும் பிரசாத் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக, எதிர்க்கட்சித் தலைவர் என்.சந்திரபாபு நாயுடு கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், இந்த விவகாரம் குறித்து ஆந்திர மாநில டிஜிபி விசாரணையைத் தொடங்கி, அந்த நபரை அடித்த குற்றச்சாட்டில் எஸ்ஐ மற்றும் கான்ஸ்டபிளை இடைநீக்கம் செய்துள்ளார்.