தலித் மாணவர் மரணம்.. வன்முறை போராட்டத்தில் அவுரியா மக்கள்.. ஆசிரியர் தலைமறைவு!
தலித் மாணவர் மரணம் தொடர்பாக உ.பி.யின் அவுரியாவில் வன்முறைப் போராட்டம். ஆசிரியர் தப்பி ஓடியதாக குற்றம் சாட்டு.
உத்தரபிரதேசத்தின் அவுரியா மாவட்டத்தில் 10 ஆம் வகுப்பு தலித் மாணவர்(15) தேர்வின் போது ஒரு வார்த்தையை தவறாக உச்சரித்ததால், ஆசிரியரால் தாக்கப்பட்டு உயிரிழந்ததைத் தொடர்ந்து வன்முறை போராட்டங்கள் நடந்தன.
வன்முறை போராட்டத்தின் போது தீ வைப்பு மற்றும் கல் வீச்சு சம்பவங்கள் பதிவாகி, இரண்டு போலீஸ் வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. இச்சம்பவம் தொடர்பாக ஐபிசியின் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் குற்றம்சாட்டப்பட்ட ஆசிரியர் தற்போது தலைமறைவாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.