முஸ்லீம் பெண்ணை திருமணம் செய்துகொண்ட தலித் நபர் கவுரக்கொலை ..!

Default Image

தலித் சமூகத்தை சேர்ந்த நாகராஜூ என்பவரும் சையத் அர்ஷினி என்னும் முஸ்லிம் பெண் இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் இவர்கள் இருவரும் காதலித்து, குடும்பத்தினரின் விருப்பத்திற்கு மாறாக கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு தான் திருமணம் செய்து கொண்டுள்ளனர். ஆனால் இவர்களது திருமணத்திற்கு வீட்டில் எதிர்ப்பு இருந்தாலும் அது வெளியில் அவ்வளவாக காட்டி கொள்ளப்படவில்லை.

இந்நிலையில் கடந்த புதன்கிழமை இரவு 9 மணி அளவில் முஸ்லிம் பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்ட நாகராஜூ எனும் 25 வயது இளைஞர் கத்தியால் குத்தி கொல்லப்பட்டுள்ளார். இது தொடர்பாக அவரது மனைவி கூறுகையில், எப்பொழுதும் போல நாகராஜூ காலையில் வேலைக்கு சென்றார். தனது மைத்துனிக்கு உடல்நிலை சரியில்லாததால் அவரது வீட்டில் தங்கும்படி தன்னிடம் கூறியிருந்தார்.

எனவே அவர் மதியம் 3 மணியளவில் வீட்டிற்கு மதிய உணவு சாப்பிடுவதற்காக வந்துவிட்டு, என்னை எனது மைத்துனியின் வீட்டில் விட்டுச் சென்றார். அதன் பின் அவர் வேலைக்கு சென்று விட்டார். மீண்டும் இரவு 8.30 மணியளவில் வேலை முடிந்து என்னை அழைப்பதற்காக இரவு  மைத்துனி வீட்டிற்கு வந்தார். அப்பொழுது அங்கு எனது கணவரை மடக்கி சிலர் தாக்கிக் கொண்டிருந்தனர். எதற்காக என் கணவரை தாக்குகிறீர்கள் என கேட்டு காப்பாற்ற உயன்றேன்.

அவர்களை எனக்கு முதலில் அடையாளம் தெரியவில்லை. மேலும், அருகில் இருந்தவர்கள் யாரும் எனக்கு உதவவில்லை. ஒரு கட்டத்தில் என் கணவரை தாக்குவது எனது சகோதரனும் அவரும் நண்பர்களும் தான் என்பதை நான் அறிந்து கொண்டேன். எனவே எனது கணவரை விட்டு விடும்படி  கூறினேன். ஆனால் அவர்கள் கேட்கவில்லை. அருகில் இருந்தவர்கள் கூட காப்பாற்ற வரவில்லை. அவர்கள் வந்திருந்தார்கள் என்றால், நிச்சயம் என் கணவரை காப்பாற்றி இருக்கலாம்.

என் கணவர் மட்டுமல்ல எங்கு குற்றம் நடந்தாலும் மக்கள் உதவிக்கு வர வேண்டும் என வருத்தம் தெரிவித்துள்ளார். மேலும் தனது கணவர் மீது 15 முதல் 20 நிமிடங்கள் வரை தொடர்ந்ததாகவும், ஆனால் யாரும் உதவ முன் வராததால் பரிதாபமாக உயிரிழந்து விட்டதாகவும் வருத்தம் தெரிவித்துள்ளார். இந்த தாக்குதல் தொடர்பாக சையத் அர்ஷினி அளித்துள்ள புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்