பீகாரில் வருகிற 28-ம் தேதி 3 கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளது. இதைதொடர்ந்து, இந்த தேர்தலில் களம் காணும் முக்கிய கட்சிகள் தேர்தல் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளன.
இந்நிலையில், ராஷ்ட்ரிய ஜனதாள கட்சியின் உறுப்பினரும், தலித் இனத்தைச் சேர்ந்தவருமான சக்தி மாலிக் சமீபத்தில், ராஷ்டிரிய ஜனதா தளத்திலிருந்து வெளியேற்றப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால், சக்தி மாலிக் ராணிகஞ்ச் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடத் தயாராக இருந்துள்ளார்.
இந்நிலையில், பீகாரின் பூர்னியா மாவட்டத்தில் உள்ள சக்தி மாலிக் வீட்டில் நேற்று மூன்று நபர்களால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். அவரது மனைவி அளித்த புகாரைத் தொடர்ந்து, ராஷ்ட்ரிய ஜனதாள கட்சி தலைவரும் சட்டசபையில் எதிர்க்கட்சித் தலைவருமான தேஜஸ்வி பிரசாத் யாதவ் மற்றும் ராஷ்ட்ரிய ஜனதாள கட்சி தலைவர் அனில் குமார் சாது , எல்ஜேபி நிறுவனர் ராம் விலாஸின் மருமகள் பாஸ்வான் ஆகியோர் பெயர் முதல் தகவல் அறிக்கையில் சேர்க்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ராஷ்ட்ரிய ஜனதாள கட்சி செய்தித் தொடர்பாளர் மிருத்யூஞ்சய் திவாரி கூறுகையில், “இவை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் மற்றும் அரசியல் சதித்திட்டத்தின் ஒரு பகுதியாக இருக்கலாம்” என்றார்.
ஜார்க்கண்ட் : மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் சட்டப் பேரவைத் தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று காலை 8மணி முதலே எண்ணப்பட்டு…
மேற்கு வங்கம் : மேற்குவங்கத்தில நடந்த இடைத்தேர்தலில் 6 தொகுதிகளிலும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. முன்னதாக…
மும்பை : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்டு வந்த நிலையில்,…
பீகார் : மாநிலத்தில் பெலகஞ்ச், இமாம்கஞ்ச், ராம்கர் மற்றும் தராரி ஆகிய நான்கு தொகுதிகளின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. தராரி…
கேரளா : கேரளாவின் வயநாடு எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ததை அடுத்து, அங்கு அவரது தங்கை கேரளா…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு பிரமாண்டமாகக் கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம்…