அம்மா வீட்டுக்கு சென்று 10 நிமிடம் தாமதம்…..தலாக் சொல்லி விவாகரத்து செய்த கணவர்…!!
முஸ்லீம் மக்கள் விவாகரத்து செய்யவேண்ண்டுமென்றால் மூன்று முறை தலாக் சொல்லிவிட்டு விவாகரத்து செய்யும் நடைமுறை இருந்து வந்தது.இந்நிலையில் இது பெண்களின் உரிமைக்கு எதிரானது என்று முத்தலாக் சட்ட புதிய மசோதா நிறைவேற்றப்பட்டது.மக்களைவையில் நிறைவேற்றப்பட்டது மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டதால் இந்த மசோதா நிலுவையில் உள்ளது.
இந்நிலையில் உத்தரபிரதேச மாநிலத்தில் மனைவி அம்மா வீட்டுக் சென்று 10 நிமிடம் காலதாமதாமாக வந்துள்ளதால் கணவன் விவாகரத்து செய்த சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து அந்த பெண் கூறுகையில் என்னுடைய அம்மா வீட்டுக்கு உடல் நலம் சரியில்லாமல் இருந்த பாட்டியை கான சென்றேன்.என்னுடைய கணவர் 30 நிமிடத்திற்குள் வர வேண்டுமென்று தெரிவித்தார்.நான் வருவதற்கு 10 நிமிடம் கால தாமதமாகி விட்டதால் என்னுடைய கணவர் தலாக் கூறி விவாகத்து செய்த்துள்ளார்.