உத்திரபிரதேச மாநில ஸ்ரவஸ்தி மாவட்டத்தை அடுத்து உள்ள காத்ரா கிராமத்தை சார்ந்த நபீஸ்.இவரது மனைவி சாயிஷா.இவர்களுக்கு பாத்திமா என்ற 5 வயது மகள் உள்ளார்.நபீஸ் மும்பை வேலை செய்து வருகிறார்.இவர் கடந்த சில நாள்களுக்கு முன் போனில் சாயிஷாவிடம் முத்தலாக் கூறியுள்ளார்.
இதை தொடர்ந்து கடந்த 06-ம் தேதி சாயிஷா போலீசாரிடம் புகார் கொடுத்து உள்ளார்.வழக்கு பதிவு செய்யாத போலீசார் நபீஸ் வந்தால் அவரை அழைத்து வரும்படி கூறினர்.கடந்த 15-ம் தேதி மும்பையில் இருந்து வந்த நபீஸ் முத்தலாக் கூறியதால் அவரது வீட்டிற்கு செல்லும் படி கூறினார்.அப்போது இருவருக்கும் வாக்குவாதம் நடைபெற்றது.
அப்போது நபீஸ் சத்தம் கேட்டு வீட்டின் உள்ளே இருந்து நபீஸ் அப்பா அசிஸுல்லா ,பாட்டி ஹசீனா மற்றும் சகோதரிகள் நாதிரா ,குடியா ஆகியோர் வந்தனர். அப்போது சாயிஷாவின் தலை முடியை பிடித்து நபீஸ் அடிக்க , நாதிரா சாயிஷாவின் மீது மண்ணெண்ணெய் ஊற்றினார். பிறகு அசிஸுல்லாவும் , ஹசீனாவும் சாயிஷாவின் மீது தீ வைத்தனர்.
இந்த அனைத்து நிகழ்ச்சிகளும் பாத்திமா கண்முன்னே நடந்து உள்ளது.சாயிஷாவின் அலறல் சத்தம் கேட்டுஅங்கு வந்த அக்கம் பக்கத்தினர்.சாயிஷாவை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.ஆனால் சாயிஷா சிகிக்சை பலனின்றி உயிர் இழந்தார்.போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.
தன் கண்முன்னே நடத்த அனைத்தையும் பாத்திமா வாக்குமூலமாக கூறினார்.இதுகுறித்து சாயிஷா சகோதரர் ரபீக் கூறுகையில் , குற்றவாளிகளை போலீசார் இன்னும் பிடிக்கவில்லை நான் நீதிமன்றத்தை நாட உள்ளதாக கூறினார்.
சென்னை : தமிழ், ஹிந்தி, தெலுங்கு என அணைத்து மொழிகளிலும் பல ஹிட் பாடல்களை பாடியுள்ள பாடகி ஸ்ரேயா கோஷல் மிகவும்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் எனும் அரசியல் கட்சியை தொடங்கிய விஜய் முதற்கட்டமாக கடந்த ஆண்டு வெற்றிகரமாக தனது…
கராச்சி : சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று கராச்சி தேசிய மைதானத்தில் நடைபெறும் போட்டியில் இங்கிலாந்து அணியும், தென்னாப்பிரிக்கா அணியும்…
சென்னை : பூமத்திய ரேகையை ஒட்டிய கிழக்கு இந்தியப்பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடலில் இருந்து மாலத்தீவு வரை…
நாகர்கர்னூல் : தெலுங்கானா மாநிலம் நாகர்கர்னூல் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீசைலம் இடது கரை கால்வாய் (SLBC) சுரங்கப்பாதையில் கடந்த சனிக்கிழமை…
கராச்சி : 2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தானில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் குரூப் பி-யில் இங்கிலாந்து,…