உலக அழகிப்போட்டியில் மகுடம் சூடினார் கிறிஸ்டினா பிஸ்கோவா! எந்த நாட்டை சேர்ந்தவர் தெரியுமா?

Miss World 2024: இந்தியாவின் மும்பை நகரில் நடைபெற்ற 71வது உலக அழகிப்போட்டியில் செக் குடியரசைச் சேர்ந்த கிறிஸ்டினா பிஸ்கோவா உலக அழகி பட்டத்தை வென்றுள்ளார். 1951-ம் ஆண்டு இங்கிலாந்தில் முதன் முறையாக உலக அழகிப் போட்டி நடைபெற்றது. 1996-ம் ஆண்டு இந்தியாவில் உலக அழகிப் போட்டி நடத்தப்பட்டது. பின்னர் 28 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இந்தியாவில் இந்த போட்டி கடந்த மாதம் தொடங்கியது.

Read More – இந்திய தேர்தல் ஆணையர் அருண் கோயல் திடீர் ராஜினாமா! தேர்தல் நெருங்கும் நேரத்தில் முடிவு

மும்பையில் உள்ள ஜியோ உலக மாநாட்டு மையத்தில் நடைபெற்ற 71வது உலக அழகிப் போட்டியில் 115 நாடுகளைச் சேர்ந்த அழகிகள் பங்கேற்றனர். இந்த போட்டியில், இந்தியா, அயர்லாந்து, எஸ்தோனியா, வடக்கு அயர்லாந்து, இந்தோனேசியா உள்ளிட்ட 14 நாடுகளை சேர்ந்த அழகிகள் இறுதிப்போட்டிக்கு தகுதிப் பெற்றனர். இதில் செக் குடியரசைச் சேர்ந்த கிறிஸ்டினா பிஸ்கோவா 2024-ம் ஆண்டுக்கான 71வது உலக அழகி பட்டத்தை தட்டிச் சென்றார்.

Read More – ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு..! குற்றவாளி புனே நகரில் பதுங்கியுள்ளதாக பரபரப்பு தகவல்

லெபனான் நாட்டைச் சேர்ந்த யாஸ்மினா ஸைத்தோன் இரண்டாம் இடம் பெற்றார். கிறிஸ்டினா பிஸ்கோவாவுக்கு 2021-ம் ஆண்டு பட்டம் வென்ற போலந்து நாட்டை சேர்ந்த கரோலினா உலக அழகிக்குரிய மகுடத்தை சூட்டினார். 24 வயதாகும் கிறிஸ்டினா, மாடலாக இருந்து கொண்டே, சட்டம் மற்றும் வணிக நிர்வாகம் ஆகிய இரண்டிலும் பட்டப்படிப்பு படித்து வருகிறார், கிறிஸ்டினா ஆங்கிலம், போலிஷ், ஸ்லோவாக் மற்றும் ஜெர்மன் மொழிகளில் சரளமாக பேசக்கூடியவர் ஆவார். செக் குடியரசின் இரண்டாவது உலக அழகி கிறிஸ்டினா ஆவார்.

Read More – நாட்டையே உலுக்கிய புதுச்சேரி சிறுமி கொலை! பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு ரூ. 7 லட்சம் வழங்கும் ஆதி திராவிடர் நலத்துறை

இதற்கு முன்னர் கடந்த 2006ஆம் ஆண்டு நடைபெற்ற உலக அழகிப் போட்டியில் அந்நாட்டை சேர்ந்த டாடானா குச்சரோவா உலக அழகி பட்டத்தை வென்றிருந்தார். அதே சமயம் உலக அழகி பட்டத்தை இந்தியா இதுவரை 6 முறை வென்றுள்ளது. இந்தியாவை சேர்ந்த ரீட்டா பரியா பவெல் (1966), ஐஸ்வர்யா ராய் பச்சன் (1994), டயானா ஹெய்டன் (1997), யுக்தா முகி (1999), பிரியங்கா சோப்ரா (2000) மற்றும் மனுஷி சில்லார் (2017) ஆகியோர் உலக அழகிப் பட்டத்தை வென்ற இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்