சிலிண்டர் விலை உயர்வு – பிரதமருக்கு நன்றி தெரிவித்த ஆம் ஆத்மி!

Default Image

ஒரு வருடத்திற்குள் சமையல் எரிவாயு விலை ரூ.305க்கு மேல் உயர்ந்துள்ளது என டெல்லி ஆம் ஆத்மி கட்சி குற்றசாட்டு.

சர்வதேச சந்தையில்,கச்சா எண்ணெயின் விலை அடிப்படையில், பெட்ரோல், டீசல் மற்றும் சாமானிய மக்கள் பயன்படுத்தும் சமையல் எரிவாயு விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி, நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யப்படும். இதுபோன்று மாதத்தில் ஒரு முறை அல்லது இருமுறை சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை மாற்றம் செய்யப்படுகின்றன.

இந்த வருடத்தில் சமையல் எரிவாயு விலை தொடர்ந்து உயர்ந்த வண்ணம் உள்ள நிலையில், இன்று மீண்டும் ரூ.15 உயர்த்தப்பட்டது. சாமானியர்கள் பயன்படுத்தும் 14.2 கிலோ கேஸ் சிலிண்டரின் விலை 15 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. சென்னையில் ஒரு சிலிண்டரின் விலை 915.50 ரூபாயாக உயர்ந்துள்ளது.

இதுபோன்று தலைநகர் டெல்லியில் ஒரு சிலிண்டரின் விலை 899.50 ரூபாயாகவும், மும்பையில் ஒரு சிலிண்டர் விலை 899.50 ரூபாயாகவும், கொல்கத்தாவில் ஒரு சிலிண்டரின் விலை 926 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் சிலிண்டர் விலை உயர்வை பட்டியலிட்டு, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

அந்த பதிவில், ஒரு வருடத்திற்குள் எல்பிஜி சிலிண்டர் விலை ரூ.305 உயர்ந்துள்ளது. டெல்லியில் எல்பிஜி சிலிண்டர் விலை நவம்பர் 2020ல் ரூ.594 இருந்து, இன்று ரூ.899 ஆக உயர்ந்துள்ளது என்பதை பட்டியலிட்டுள்ளது. ஒரு வருடத்திற்குள் எல்பிஜி விலை ரூ.305 -க்கும் மேல் உயர்த்தியதற்கு நன்றி மோடி ஜி என்று பதிவிட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்