சிலிண்டர் வெடிவிபத்து: உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி அறிவித்தார் பிரதமர்!
ஜோத்பூர் சிலிண்டர் வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என பிரதமர் அறிவிப்பு.
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் மாவட்டம் ஷேர்கர் அருகே உள்ள புங்ராவில் திருமண நிகழ்வு நடைபெற்ற போது சிலிண்டர் வெடித்து பெரிய விபத்து ஏற்பட்டது. இதில், 32 பேர் உயிரிழந்துள்ளனர், 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகியிருந்தது.
இந்த நிலையில், ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் சிலிண்டர் வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
காயமடைந்தவர்களுக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.50,000 வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். டிசம்பர் 8ம் தேதி ஜோத்பூரில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியின் போது எரிவாயு சிலிண்டர் வெடித்துச் சிதறியது. இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 32 ஆக உயர்ந்துள்ளது.