உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள திக்ரி எனும் கிராமத்தில் சிலிண்டர் வெடித்து விபத்துக்குள்ளாகியதில் மூன்று குழந்தைகள் உட்பட 8 பேர் உயிரிழந்துள்ளனர்.
உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள திக்ரி எனும் கிராமத்தில் வசித்து வரக்கூடிய நூருல் ஹசன் என்பவரது வீட்டில் உள்ள எல்பிஜி சிலிண்டர் நேற்று இரவு 10 மணியளவில் வெடித்துள்ளது. இந்த சிலிண்டர் வெடித்ததில் அவர் வசித்து வந்த இரட்டை அடுக்கு மாடி குடியிருப்பு இடிந்து விழுந்துள்ளது.இந்த விபத்தில் 8 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 7 பேர் படுகாயம் அடைந்துள்ள நிலையில், அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
உயிரிழந்தவர்களில் மூன்று பேர் குழந்தைகள் எனவும் கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து காவல்துறை கண்காணிப்பாளர் சந்தோஷ் குமார் அவர்கள் தெரிவிக்கையில், சம்பவம் அறிந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு தீயணைப்பு வீரர்கள் அனுப்பி வைக்கப்பட்டதாகவும், தடவியல் குழுக்கள் மாதிரிகளை சேகரித்து வருவதாகவும் இந்த சம்பவம் குறித்து தற்போது விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் உயிரிழந்த 8 பேரின் உத்தரபிரதேச மாநிலத்தின் முதல்வர் யோகி ஆதித்யநாத் அவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளதுடன், காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்கள் விரைவில் குணமடைந்து வீடு திரும்பவும், அவர்களுக்கு நல்ல சிகிச்சை அளிக்குமாறும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும் சம்பவம் நடந்த இடத்தில் விசாரணை நடத்தி சிலிண்டர் வெடித்ததற்கான காரணம் குறித்து அறிக்கையை அரசிடம் சமர்ப்பிக்குமாறும் மாவட்ட நீதிபதி அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.
திருப்பதி : ஆந்திர பிரதேச மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாளை (ஜனவரி 10) முதல் ஜனவரி 19ஆம் தேதி…
சத்தீஸ்கர்: சத்தீஸ்கரின் முங்கேலி மாவட்டத்தில் இரும்பு ஆலையில் புகைபோக்கி இடிந்து விழுந்ததில் சில தொழிலாளர்கள் காயமடைந்தனர் என்றும், பலர் விபத்தில்…
ஹைதராபாத்: ஹைதராபாத்தின் செர்லப்பள்ளி பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள ரயில் நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக, அதிநவீன வசதிகளுடன் கூடிய 'ஸ்லீப்பிங் பாட்'…
சென்னை : தந்தை பெரியார் குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய கருத்துக்கள் தற்போது…
ஆந்திரப் பிரதேசம்: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்விற்கான இலவச தரிசன டோக்கன்களை வாங்க, நேற்று இரவு அதிகளவில்…
சென்னை :இந்த மார்கழி மாதம் கிடைக்கக்கூடிய காய்கறிகளில் ஏதேனும் ஏழு வகை காய்கறிகளைக் கொண்டு கூட்டு செய்வது எப்படி என…