குஜராத் – பாகிஸ்தான் இடையே கரையை கடக்கும் பிபோர்ஜாய் புயல்.!

Published by
கெளதம்

பிபோர்ஜாய் புயல்:

மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவிய மிக தீவிர புயல் “பிபோர்ஜாய்” வடக்கு-வடகிழக்கு திசையில் நகர்ந்து, நேற்று அதி தீவிர புயலாக வலுப்பெற்று, அதே பகுதியில் மும்பையில் இருந்து மேற்கே சுமார் 560 கிலோமீட்டர் தொலைவில், போர்பந்தரில் (குஜராத்) இருந்து தென்-தென்மேற்கே சுமார் 460 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது.

இது மேலும் வலுப்பெற்று, 14ம் தேதி காலை வரை வடக்கு திசையிலும், அதன் பிறகு, வடக்கு-வடகிழக்கு திசையிலும் நகர்ந்து சௌராஷ்டிரா- கட்ச் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பாகிஸ்தான் கடற்கரை பகுதிகளில், 15ம் தேதி 1130-1430 மணி அளவில் மிக தீவிர புயலாக, மாண்டிவி (குஜராத்) – மற்றும் கராச்சி (பாகிஸ்தான்) கடற்கரை பகுதிகளில் புயல் கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

அந்தநேரத்தில், காற்றின் வேகம் மணிக்கு 125-135 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 150 கிலோ மீட்டர் வேகத்திலும் இருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மழை:

மேலும், மேற்கு திசை காற்று மற்றும் வெப்ப சலனம் காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

இன்று சூறாவளிக்காற்று:

  • இலட்சத்தீவு பகுதிகள், கேரள – கர்நாடக கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
  • வடகிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 150 முதல் 165 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 185 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
  • சௌராஷ்டிரா-கட்ச் கடற்கரை பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
Published by
கெளதம்

Recent Posts

விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இலங்கை தேர்தல்! மும்முனை போட்டியில் வெல்லப்போவது யார்?

இலங்கை : அண்டை நாடான இலங்கையில் இன்று காலையில் அதிபருக்கான தேர்தல் தொடங்கியது. இந்தத் தேர்தலில், தற்போதைய அதிபரான ரணில்…

5 mins ago

அனிருத்தை சிம்மாசனத்தில் உட்கார வைத்து அழகு பார்த்த சூப்பர் ஸ்டார்.!

சென்னை : 'வேட்டையன்' படத்தின் இசை வெளியிட்டு விழா நேற்று சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. விழாவில், படத்தின் ஹிட் பாடலான…

27 mins ago

நெற்றியில் இருந்த ‘குங்குமம்’ எங்கே.? விஜய் முன்னெடுக்கும் அரசியல் நிலைப்பாடு..?

சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் (டிவிட்டர்) வலைதள பக்கத்தின் முகப்பு புகைப்படம் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது.…

1 hour ago

வேட்டையன் இசை வெளியீட்டு விழா.. ரஜினி சொன்ன “கழுதை – டோபி” கதை!

சென்னை : இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் 'வேட்டையன்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.…

1 hour ago

அப்பா என் பாட்டு எப்படி இருக்கு.. மாரி செல்வராஜ்-க்கு டஃப் கொடுத்த அவரின் குட்டி வாண்டு.!

சென்னை: வாழை படம் வெளியாகி உலக அளவில் மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்துள்ள நிலையில், அந்த படத்தில் வெளியான பாடல்களும் ரசிகர்கள்…

1 hour ago

“அவருக்கு துளிகூட பயம் இல்லை” ! ரிஷப் பண்ட்டை புகழ்ந்த ஆடம் கில்கிறிஸ்ட்!

சென்னை : இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது தற்போது நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில்…

2 hours ago