பிபார் ஜாய் புயல் எதிரொலி… வெளுத்து வாங்கும் கனமழை…50,000 பேர் வெளியேற்றம்..!!
மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஏற்பட்ட பிபார் ஜாய் புயலானது வருகின்ற 15-ம் தேதி சௌராஷ்டிரா, கட்ச் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பாகிஸ்தான் கடற்கரை பகுதியில் உள்ள ஜகாவ் துறைமுகத்திற்கு அருகே, மிக தீவிர புயலாக மாறி, 150-கிமீ வேகத்தில் கரையை கடக்கும் என்று வானிலை மையம் முன்னதாக அறிவித்திருந்தது.
இந்த நிலையில், இந்த புயலின் காரணமாக நிலச்சரிவு, கனமழை பெய்வதால் வெல்லம் என பல பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகமாக இருக்கும் காரணத்தால் முன்னெச்சரிக்கையாக குஜராத்தில் 50,000 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். இது தொடர்பாக பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று மூன்று படைத் தலைவர்களுடன் பேசினார்.
தற்போது, சௌராஷ்டிரா-கட்ச் பகுதியின் சில பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. மேலும், பிபர்ஜோ புயல் குஜராத் கட்ச் மாவட்டத்தில் உள்ள ஜக்காவ் துறைமுகத்திற்கு அருகே நாளை கரையை கடக்கும் என்பதால் மிக கனமழை மற்றும் சூறாவளிக்காற்று வீசக்கூடும் என்பதால், முன்னெச்சரிகை நடவடிக்கையாக அதிகாரிகள் இதுவரை குஜராத்தின் கடலோரப் பகுதிகளில் இருந்து 50,000 மக்களை தற்காலிக பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளார்கள்.
மேலும், குஜராத்தின் போர்பந்தரில் புதன்கிழமை பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் பல மரங்கள் வேரோடு சாய்ந்த நிலையில் போக்குவரத்து தடைபட்டது. குஜராத், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, கோவா, லட்சத்தீவு உள்ளிட்ட பல மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) வானிலை மையம் கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது.