Cyclone Biparjoy Live Updates: பிப்பர்ஜாய் புயல் நிலவரம் என்ன..? லேட்டஸ்ட் தகவல் இதோ.!!
நேற்று மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவிய அதிதீவிர புயல் “பிப்பர்ஜாய்” வடக்கு திசையில் நகர்ந்து, இன்று காலை மத்திய கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய வடகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் போர்பந்தரில் (குஜராத்) இருந்து தென்மேற்கே சுமார் 320 கிலோமீட்டர் தொலைவில், தேவ் பூமி துவாரகா (குஜராத்) இருந்து தென்-தென்மேற்கே சுமார் 360 கிலோமீட்டர் தொலைவில், ஜக்காவு துறைமுகத்திலிருந்து (குஜராத்) தெற்கே சுமார் 440 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது.
இது மேலும் வரும் 14-ஆம் தேதி காலை வரை வடக்கு திசையிலும், அதன் பிறகு, வடக்கு-வடகிழக்கு திசையிலும் நகர்ந்து சௌராஷ்டிரா- கட்ச் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பாகிஸ்தான் கடற்கரை பகுதிகளில் 15 -ஆம் தேதி அன்று நண்பகல், மிக தீவிர புயலாக, மாண்டிவி (குஜராத்)- மற்றும் கராச்சி (பாகிஸ்தான்) இடையே, ஜக்காவு துறைமுகம் (குஜராத்) அருகே கரையை கடக்கக்கூடும். அச்சமயத்தில் காற்றின் வேகம் மணிக்கு 125-135 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 150 கிலோ மீட்டர் வேகத்திலும் இருக்கக்கூடும்.