அடுத்த 12 மணி நேரத்தில் தீவிர சூறாவளி புயலாகவும், நாளை காலையில் அதிதீவிர சூறாவளி புயலாகவும் தீவிரமடைய வாய்ப்புள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியானது, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று நேற்று மாலை(அதாவது 16-ம் தேதி )புயலாக வலுப்பெறும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்த புதிய புயலுக்கு “ஆம்பன்” என பெயரிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஆம்பன் புயல் சூறாவளி புயலாக வேகமாக தீவிரமடைந்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால், அடுத்த 12 மணி நேரத்தில் தீவிர சூறாவளி புயலாகவும், நாளை(18-ம் தேதி) காலையில் அதிதீவிர சூறாவளி புயலாகவும் தீவிரமடைய வாய்ப்புள்ளது.
சூறாவளி புயலைக் கருத்தில் கொண்டு கடலோர மாவட்டங்களுக்கு “ஷ்ராமிக் ஸ்பெஷல்” ரயில்களை இயக்குவதை தற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறு ஒடிசா அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேரளா : கேரளாவில் உள்ள ஒரு அங்கன்வாடியில், ஒரு குழந்தை உப்மாவிற்கு பதிலாக பிரியாணி மற்றும் சிக்கன் ஃப்ரை கேட்கும்…
சென்னை : இன்று தமிழ்நாடு மாநில சுற்றுசூழல் மற்றும் காலநிலை துறை சார்பில் நடத்தப்படும் காலநிலை மாற்ற உச்சி மாநாடு…
சென்னை : நடந்து முடிந்த இங்கிலாந்துக்கு எதிரான இருபதுக்கு 20 போட்டியில் வெற்றி பெற்று இந்திய அணி கோப்பையை கைப்பற்றியது.…
டெல்லி : இந்திய கிரிக்கெட் அணியில் விளையாடும் வீரர்கள், சர்வதேச போட்டிகள் விளையாடும் நாட்களை தவிர்த்து இடையில் உள்ளூர் போட்டிகளான…
கோவை : மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மலையின் ஒரு பகுதியில் இந்து மத கடவுள் முருகன் கோயில், காசி விஸ்வநாதர்…
சென்னை : சென்னையில் நேற்று 1 சவரன் ரூ.680 குறைந்து ரூ.61,640க்கு விற்பனையான நிலையில், இன்று புதிய உச்சத்தை எட்டியுள்ளது.…