நீட் வினாத்தாள் கசிவு., மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் முக்கிய உத்தரவு.!
டெல்லி : நடப்பாண்டு மருத்துவ சேர்க்கைக்காக அண்மையில் நடைபெற்று முடிந்த நீட் நுழைவுத்தேர்வில் பீகார், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள சில மையங்களில் நீட் வினாத்தாள் கசிவு ஏற்பட்டதாக கூறி உச்சநீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் பதியப்பட்டன.
இந்த வழக்கு விசாரணை தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையில் நடைபெற்றது. நீட் மருத்துத்தேர்வு நடத்த வேண்டும் என்ற மாணவர்களின் கோரிக்கைகள் முன்னதாக உச்சநீதிமன்ற நீதிபதி அமர்வால் நிராகரிக்கப்பட்டுவிட்டது.
அதனை தொடர்ந்து இன்று இந்த வழக்கில் சில முக்கிய உத்தரவுகளை மத்திய அரசுக்கு தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு கூறியுள்ளது. அதன்படி, நீட் தேர்வு வழிகாட்டு நெறிமுறைகளை தேசிய தேர்வு மையம் ஒழுங்குபடுத்த வேண்டும். நீட் வினாத்தாள்களை கொண்டு செல்கையில் பாதுகாப்பான வாகனங்களை பயன்படுத் வேண்டும் உள்ளிட்ட உத்தரவுகளை பிறப்பித்துள்ளது .
மேலும், தேர்வு முறையில் இணையப் பாதுகாப்பு, மேம்பட்ட அடையாளச் சோதனைகள், தேர்வு மையங்களின் சிசிடிவி கண்காணிப்பு ஆகியவற்றில் உள்ள பலவீனங்களைக் கண்டறிந்து அதில் தொழில்நுட்ப முன்னேற்றங்களை புகுத்தி சைபர் பாதுகாப்பை உறுதி செய்ய மத்திய அரசால் அமைக்கப்பட்ட தேர்வு குழு உறுதியளிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
NEET-UG 2024 வினாத்தாள்களில் முழுதான விதிமீறல் எதுவும் இல்லை. வினாத்தாள் கசிவு என்பது பாட்னா மற்றும் ஹசாரிபாக் பகுதிகளில் மட்டுமே நிகழ்ந்துளளது. அதுபற்றிய விசாரணையை சிபிஐ தொடர்ந்து வருகிறது.
தேசிய தேர்வு முகமையின் செயல்முறைகளில் உள்ள அனைத்து குறைபாடுகளையும் தனது தீர்ப்பில் எடுத்துக்காட்டியுள்ளதாக உச்ச நீதிமன்ற அமர்வு கூறியுள்ளது. தற்போது எழுந்துள்ள பிரச்னைகள் மீண்டும் நிகழாமல் இருக்க, இந்த ஆண்டிலேயே மத்திய அரசு நீட் விவகாரத்தில் தீர்வு காண வேண்டும் என்றும் உச்ச நீதிமன்ற நீதிபதி அமர்வு உத்தரவிட்டுள்ளது.