காங்கிரஸ் கட்சியின் அடுத்த தலைவர் யார் ?டெல்லியில் தொடங்கியது கூட்டம்

டெல்லியில் காங்கிரஸ் செயற்குழு கூட்டம் தொடங்கியுள்ளது.
இந்த ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தது. தோல்விக்கு பொறுப்பேற்று ராகுல் காந்தி தலைவர் பதவியை ராஜினாமா செய்வார் என்று செய்தி அதிகம் உலாவி வந்தது.இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்வது தொடர்பாக ஏற்கனவே கடிதம் அளித்துவிட்டதாக விளக்கம் அளித்தார் .
அவர் வெளியிட்ட அறிவிப்பில் , நான் ஏற்கனவே ராஜினாமா கடிதம் கொடுத்துவிட்டதால் தலைவராக நீண்டநாள் தொடர முடியாது.மேலும் தாமதிக்காமல் காங்கிரஸ் கட்சிக்கு உடனே புதிய தலைவர் தேர்வு செய்ய வேண்டும் என்றும் நான் ஏற்கனவே ராஜினாமா கடிதம் கொடுத்துவிட்டதால் தலைவராக நீண்டநாள் தொடர முடியாது என்று ராகுல் காந்தி தெரிவித்தார்.
இந்த நிலையில் டெல்லியில் காங்கிரஸ் செயற்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது.காங்கிரஸ் கட்சியின் அடுத்த தலைவரை தேர்வு செய்வதற்கான கூட்டம் டெல்லியில் நடைபெற்று வருகிறது .கூட்டத்தில் சோனியா காந்தி, வேணுகோபால், ரன்தீப் சுர்ஜேவாலா உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : டெல்லி முதல்வர் முதல்…வாரணாசியில் சிக்கிய தமிழ்நாடு மாற்றுத்திறனாளி கிரிக்கெட் வீரர்கள் வரை!
February 20, 2025
INDvBAN : ஆட்டம் காட்டிய இந்திய பவுலர்கள்.., நிலைத்து ஆடிய வங்கதேச வீரர்கள்! 229 டார்கெட்!
February 20, 2025