மும்பையில் WWE ஜான் சீனா.. இந்திய பாரம்பரிய உடையில் வைரல் வீடியோ.!

John Cena entry ambani

ஜான் சீனா : ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானிக்கும், ராதிகா மெர்சன்ட்டுக்கும் திருமணம் மும்பையில் இன்று நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்பதற்காக உலகின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பிரபலங்கள், மும்பை வந்த வண்ணம் உள்ளனர்.

முன்னாள் WWE மல்யுத்த வீரரான ஜான் சீனாவும் மும்பை வந்தார். விமான நிலையம் வந்திறங்கிய அவர், ரசிகர்களை நோக்கி கை அசைத்துவிட்டு காரில் ஏறி சென்றார். தற்பொழுது, திருமணத்திற்கு தயராகிய ஜான் சீனா வட இந்திய பாரம்பரிய உடையை அணிந்து கொண்டு ஜியோ உலக மாநாட்டு மையத்திற்கு வருகை புரிந்துள்ளார். அவரை வரவேற்று முகேஷ் அம்பானி விழாவிற்கு அழைத்து சென்றார்.

அவர் அங்கிருக்கும் கேமராக்களுக்கு போஸ் கொடுத்த வீடியோக்கள் இணையத்தில் கசிந்துள்ளது. முன்னதாக, ரியாலிட்டி டிவி நட்சத்திரங்களான கிம் கர்தாஷியன் மற்றும் க்ளோ கர்தாஷியன்,  ஆகியோர் வருகை தந்துள்ளார்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்