அமேசான் செயலியில் 96,000 ரூபாய் மதிப்புள்ள ஏசி 5,900 க்கு விற்பனை என தவறாக பதிவிடப்பட்டு திருத்தப்பட்டதால், முன்பதிவு செய்த மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
இந்தியாவிலுள்ள அமேசான் நிறுவனம் பல கோடிக்கணக்கான மக்களின் ஆதரவைப் பெற்ற நிறுவனம். இந்த நிறுவனத்தின் மூலமாக பலர் தங்களுக்கு தேவையான பொருட்களை வீட்டில் இருந்தே வாங்கிக் கொள்வதற்கு ஏதுவான வசதிகள் உள்ளது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அமேசானில் 96,000 ரூபாய் மதிப்புள்ள டோஷிபா 2021 ஏசியை 5,900 தள்ளுபடி செய்து 90,800 க்கு விற்பனை செய்ய அமேசான் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
தள்ளுபடி 5900 என்பதற்கு பதிலாக விற்பனை செய்யக்கூடிய விலையே 5,900 என தவறாக ஆன்லைனில் பதிவு செய்து பட்டியலிடப்பட்டுள்ளது. இதனை கண்ட வாடிக்கையாளர்கள் இவ்வளவு விலை குறைவாக விற்கப்படுகிறது என்று பலரும் அடித்து பிடித்து ஏசியை முன்பதிவு செய்துள்ளனர். அதன் பின்னராக தங்கள் தவறை உணர்ந்த அமேசான் நிறுவனம் உடனடியாக தங்கள் பதிவு தவறை திருத்தி கொண்டுள்ளது.
பின் 90,8000-க்கு விற்பனை செய்யப்படும் என பதிவிட்டு உள்ளது. இதனால் முன்பதிவு செய்த வாடிக்கையாளர்கள் அனைவரும் ஏமாற்றத்திற்குள்ளாகியுள்ளனர். ஆனால் 5,900 என நினைத்து முன்பதிவு செய்த வாடிக்கையாளர்களுக்கு என்ன விலையில் ஏசி வந்து சேரும் என்பது குறித்து அமேசான் நிறுவனத்தில் இருந்து எந்த கருத்தும் தெரிவிக்கப்படவில்லை.
டெல்லி : டெல்லியின் 70 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை 19 இடங்களில் பலத்த பாதுகாப்புடன் தொடங்கியது. டெல்லி சட்டமன்றத்…
சென்னை : 70 தொகுதிகளை கொண்ட டெல்லி சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான…
சென்னை : தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் குரூப் 2, குரூப் 2ஏ பிரதான ( Main)…
சென்னை : ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் மற்றும் டெல்லி சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை நடைபெறவுள்ளது.…
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகேயுள்ள போச்சம்பள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வரும் மாணவியை அதே…
டெல்லி : மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்ற 2024 டி20 உலகக் கோப்பையை இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இந்திய…