வாடிக்கையாளர்களின் கவனத்திற்கு.! உபேர் ஈட்ஸ் நிறுவனத்தை கைப்பற்றிய சொமேட்டோ.!
- அமெரிக்காவின் முக்கியமான ஆன்லைன் கால்-டாக்ஸி உபேர் நிறுவனம், உபேர் ஈட்ஸ் என்ற உணவு டெலிவரியை 2007-ம் ஆண்டு இந்தியா முழுவதும் சுமார் 500க்கும் மேற்பட்ட நகரங்களில் கொண்டுவந்தது.
- தற்போது உபேர் ஈட்ஸ் உணவு டெலிவரி நிறுவனம் சந்தையில் பல சிக்கலும், பல இழப்புகளும் அடைந்ததால், இந்தியாவில் முதன்மை நிறுவனமான சொமேட்டோவிற்கு விற்றுள்ளது.
அமெரிக்காவின் முக்கியமான ஆன்லைன் கால்-டாக்ஸி நிறுவனம் உபேர் (uber). இந்நிறுவனம் முதலில் கால்-டாக்ஸி சேவையைத் தொடங்கி, கொஞ்ச கொஞ்சமாக பல நாடுகளுக்கு தன் கிளையை விரிவுபடுத்தியது. ஆனால், கால் டாக்ஸிக்கு பிறகு உபேர் நிறுவனத்தின் மற்றுமொரு முக்கிய சேவையாக உபேர் ஈட்ஸ் என்ற உணவு டெலிவரியை 2007-ம் ஆண்டு இந்தியா முழுவதும் சுமார் 500க்கும் மேற்பட்ட நகரங்களில் கொண்டுவந்தது.இதற்கென இதே உபேர் ஆப்பின் உணவு டெலிவரி ஆப் வடிவமாக வெளிவந்தது. வாடிக்கையாளர்களுக்கு தேவையான உணவை ஆர்டரின் பேரில் விரைவாக அவர்களின் இருப்பிடத்துக்கே சென்று சேர்க்கும் இந்த உபேர் ஈட்ஸ் நிறுவனமும் தனது கிளைகளை உலக நாடுகள் முழுவதும் விரிவுபடுத்தியது.
இந்நிலையில், உபேர் டாக்ஸி, உபேர் ஈட்ஸ் என்கிற பெயரில் உணவு டெலிவரி செய்வதுபோலவே, பிரபல கால் டாக்ஸி நிறுவனமான ஓலா, ஃபுட் பாண்டா என்கிற பெயரில் உணவு டெலிவரி செய்து வருகிறது. இந்தியாவில் முதன்மை நிறுவனமான சொமேட்டோ மற்றும் ஸ்விக்கி அவர்களின் ஆதிக்கத்தை செலுத்தி வந்தனர். இதனால் உபேர் ஈட்ஸ் பல சிக்கல்களை சந்தித்தது. பின்னர் உபேர் ஈட்ஸ்வுடன் தொடர்பில் இருந்த நேரடி உணவகங்கள், டெலிவரி பாட்னர்கள் மற்றும் பயனாளர்கள் இனி சொமேட்டோவுடன் இணைவார்கள் என்று யூபர் ஈட்ஸ் சார்பில் தெரிவித்ததென்று சொமேட்டோ அதிரடியாக அறிவித்தது. பின்னர் கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் 5 மாத காலப்பகுதியில் மட்டும் இந்தியாவில் உபேர் ஈட்ஸ் நிறுவனம் 2200 கோடி ரூபாய் இழந்துள்ளது என கூறப்படுகிறது.
அதைத்தொடர்ந்து, ஆங்காங்கே உள்ள தன்னுடைய நேரடி போட்டியாளர்களிடம் சமரசம் செய்துகொண்டு யூபர் ஈட்ஸினை கைமாற்றுவதென உபேர் முடிவு எடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. தற்போது யூபர் ஈட்ஸ் நிறுவனம் வெளியேறுவதுதான் ஒரே வழியென்று சொமேட்டோவிற்கு அதிகாரபூர்வமாக விற்றுள்ளது. உலகளவில் உபேர் ஈட்ஸ் நிறுவனத்தின் பங்கு, இந்தியாவில் 3 சதவிகிதம் மட்டுமே என்றும், இதனால் மிக கடுமையாக இழப்பு ஏற்பட்டுள்ளது என பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். உபேர் ஈட்ஸ் தன்னுடைய போட்டி நிறுவனமான ஃபுட் பாண்டாவை விட அதிக உணவு டெலிவரிகளை செய்தாலும் (சுமார் 1.5 லட்சம் முதல் 2.5 லட்சம் டெலிவரிகள்), சொமேட்டோ மற்றும் ஸ்விக்கி ஆகிய நிறுவனங்கள் 5 முதல் 10 லட்சம் வரை உணவு டெலிவரி செய்கின்றன. அதனால் உபேர் ஈட்ஸ் சந்தையில் சரிவு காரணமாக சொமேட்டோவிடம் கைமாற்றியுள்ளது.
மேலும், இந்தியாவில் முதல் இடத்தில் இருக்கும் சொமேட்டோ மற்றும் ஸ்விக்கி இரண்டு நிறுவனமும் இனி கடும் போட்டி நிலவும் எனவும், அதிக தள்ளுமடிகள் அறிவிக்கும் என்று மக்கள் மத்தியில் பெரும் எதிர்பாக்கப்படுகிறது. பின்னர் உபேர் ஈட்ஸ் மட்டும் தான் சொமேட்டோவிடம் விற்றுள்ளது, யூபர் டாக்சி வழக்கம்போல் இயங்கும் என்று அந்நிறுவனம் தெரிவித்தது. இந்த ஆண்டு தொடக்கத்திலேயே உபேர் ஈட்ஸ் தென் கொரியாவில் இருந்து வெளியேறியது என குறிப்பிடப்படுகிறது.