சிபிஎஸ்இ பள்ளிகளில் நடப்பு கல்வி ஆண்டிற்கான பாடத்திட்டங்கள் குறைப்பு….!
நடப்பு கல்வியாண்டிற்கான சிபிஎஸ்இ பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டுள்ளதாக சிபிஎஸ்இ அறிவிப்பு.
கொரோனா தொற்று பரவல் காரணமாக, மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு, சிபிஎஸ்இ பல அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. அதன்படி, நடப்பு கல்வியாண்டிற்கான சிபிஎஸ்இ பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 9 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான கல்வியாண்டு 2 பருவங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. செய்முறை தேர்வு உள்ளிட்ட தேர்வுகளுக்கான மதிப்பெண்ணும் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், முதல் பருவத்தில் 50% பாடங்களும், இரண்டாம் பருவத்தில் 50% படங்களுமாக பாடத்திட்டங்கள் நிறைவு செய்யப்படும் என்றும், முதல் பருவத்திற்கான தேர்வு நவம்பர் – டிசம்பரிலும், இரண்டாம் பருவத்திற்கான தேர்வு மார்ச் – ஏப்ரலில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பாடத்திட்டங்கள் குறித்த விவரங்கள் அதிகாரப்பூர்வ வலைத்தளமான cbseacademic.nic.in இல் வெளியிடப்பட்டுள்ளது.