Categories: இந்தியா

கேரளாவில் மும்முனை போட்டி… களத்தில் 194 வேட்பாளர்கள்.. வாக்குபதிவின் தற்போதைய நிலவரம்!

Published by
பாலா கலியமூர்த்தி

Kerala Election: கேரளாவில் மக்களவை தேர்தலின் வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வரும் நிலையில், 9 மணி நிலவரப்படி 11.98% வாக்கு பதிவானதாக தகவல்.

இன்று நாடு முழுவதும் 13 மாநிலங்களில் மக்களவை தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் குறிப்பாக கேரளாவில் உள்ள 20 மக்களவை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று ஒரே கட்டமாக நடைபெறுகிறது.

கேரளாவில் ஆளும் இடதுசாரிகள் கூட்டணி, காங்கிரஸ் கூட்டணி மற்றும் பாஜக கூட்டணி என மும்முனை போட்டி நிலவி வரும் நிலையில், 194 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். எனவே மக்களவை தேர்தலின் வாக்குப்பதிவுக்கான அணைத்து ஏற்பாடுகளும் தேர்தல் ஆணையம் செய்துள்ளது.

பதற்றமான மற்றும் அச்சுறுத்தல் இருக்கும் வாக்குச்சாவடிகள் தீவிர கண்காணிப்பில் இருந்து வருகிறது. இந்த சூழலில் இன்று காலை முதல் கேரளாவில் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் தங்களது ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர்.

இந்த நிலையில், கேரளாவில் காலை 9 மணி நிலவரப்படி 11.98% வாக்குங்கள் பதிவாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் அதிகபட்சமாக அட்டிங்கள் 9.52%, கோட்டயம் 9.37%, ஆழப்புலா 9.02%, மாவேலிக்கராவில் 8.88% வாக்குகள் பதிவாகியுள்ளதாக கூறப்படுகிறது.

இதுபோன்று மற்ற மாநிலங்களில் காலை 9 மணி நிலவரப்படி, அசாம் 9.71%, பீகார் 9.84%, சத்தீஸ்கர் 15.42%, ஜம்மு காஷ்மீர் 10.39%, கர்நாடகா 9.21%, மத்திய பிரதேசம் 13.82%, மகாராஷ்டிரா 7.45%, மணிப்பூர் 15.49%, ராஜஸ்தான் 11.77%, திரிபுரா 16.65%, உத்தர பிரதேசம் 11.67%, மேற்கு வங்கம் 15.68% வாக்குகள் பதிவாகியுள்ளது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

மும்பை படகு விபத்து : 13 பேர் பலி, 101 பேர் மீட்பு! மகாராஷ்டிரா முதலமைச்சர் தகவல்!

மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…

2 hours ago

லோகேஷ் கனகராஜை கதறவிட்ட பாரத்! வெளியான சி(ரி)றப்பான வீடியோ இதோ…

சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…

4 hours ago

“நாங்கள் அம்பேத்கருக்கு எதிரானவர்கள் அல்ல.,” அமித்ஷா விளக்கம்!

டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய  மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…

5 hours ago

புஷ்பா 2 வெளியீடு: நெரிசலில் சிக்கிய சிறுவன் மூளைச் சாவு… தாயை தொடர்ந்து மகனும் உயிரிழந்த சோகம்!

ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…

5 hours ago

“அம்பேத்கர்… அம்பேத்கர்…” அமித்ஷாவை வன்மையாக கண்டிக்கிறேன் – கொந்தளித்த விஜய்!

சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…

6 hours ago

இன்றும், நாளையும் 4 மாவட்டங்களில் விட்டு விட்டு மழை பெய்யும் – டெல்டா வெதர்மேன்.!

சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…

7 hours ago