மிசோரம் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள்! யார் முன்னிலை? தற்போதைய நிலவரம்!

Mizoram Election Result

மிசோரம் மாநிலத்தில் உள்ள 40 தொகுதிகளுக்கு கடந்த 7ம் தேதி சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஒரே கட்டமாக நடைபெற்றது. நேற்று சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் தெலுங்கானா சட்டப்பேரவை தேர்தலும் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது.

இதில், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கரில் பாஜக மாபெரும் வெற்றியை பெற்றது. இந்த வெற்றியின் மூலம் வரும் நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் எதிரொலிக்கும் என கூறப்படுகிறது. இந்த 5 மாநிலங்களில் 4 மாநிலங்களில் முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று மிசோரம் மாநிலம் சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள் காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகிறது.

தெலுங்கானா தேர்தல் ஹைலைட்ஸ்… ஆட்சி கோரும் காங்கிரஸ்.! முன்னேறிய பாஜக.!

மிசோரமில் 75.68% வாக்குகள் பதிவாகியுள்ள நிலையில், 40 மையங்களில் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மாநில தேர்தல் ஆணையத்தின்படி, வாக்கு எண்ணிக்கையில் 4000 பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். மிசோரமில் 40 சட்டசபை தொகுதிகள் உள்ளதால் ஒரு கட்சி தனித்து ஆட்சியை பிடிக்க 21 இடங்களில் வெற்றி பெற வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

தற்போது ஆட்சியில் உள்ள மிசோ தேசிய முன்னணி, (MNF), ஜோரம் மக்கள் இயக்கம் (ZPM), காங்கிரஸ், பாஜக என போட்டி நிலவுகிறது. ஆனால், ஜோரம் மக்கள் இயக்கம் (ZPM) ஆட்சியை கைப்பற்ற வாய்ப்பு உள்ளது கூறப்படுகிறது. அந்த வகையில், இன்று நடைபெறும் வாக்கு எண்ணிக்கையில் ZPM கட்சி தான் முன்னிலை வகிக்கிறது.

மிசோரம் மாநில வாக்கு எண்ணிக்கையின் தற்போதைய நிலவரப்படி, ஜோரம் மக்கள் இயக்கம் (ZPM) 28 சட்டமன்றத் தொகுதிகளிலும், மிசோ தேசிய முன்னணி (MNF) 8 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது. இதுபோன்று, இந்திய தேசிய காங்கிரஸ் (INC) ஒரு இடத்திலும், பாரதிய ஜனதா கட்சி (BJP) 3 இடங்களிலும் முன்னணியில் உள்ளன. மேலும், ZPM முதல்வர் வேட்பாளர் லால்துஹோமா, செர்ச்சிப் தொகுதியில் 1,390 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்