இறுதிக்கட்டத்தில் 2ம் கட்டம்… டாப்பில் திரிபுரா… மற்ற மாநிலங்களில் நிலவரம் என்ன?
Election2024: இன்று நடைபெற்று இரண்டாம் கட்ட மக்களவை தேர்தலில் அதிகபட்சமாக திரிபுரா மாநிலத்தில் வாக்கு பதிவாகியுள்ளது.
நாடாளுமன்ற மக்களவை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று 13 மாநிலங்களில் உள்ள 88 தொகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று காலை மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு தற்போது இறுதி கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இளைஞர்கள், முதல் தலைமுறை வாக்காளர்கள் என வாக்களிக்க தகுதியுள்ள அனைவரும் தங்களது வாக்குகளை செலுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று பிற்பகல் 3 மணி நிலவரப்படி, திரிபுரா மாநிலத்தில் அதிகபட்சமாக 68.92% வாக்குகள் பதிவாகியுள்ளது என தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. அதேபோல் குறைந்தபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் 43.01% வாக்குகளே பதிவாகியுள்ளது என தெரிவிக்கப்படுகிறது.
மற்ற மாநிலங்களில் பிற்பகல் 3 மணி நிலவரம்:
- அசாம் – 60.32%
- பீகார் – 44.24%
- சத்தீஸ்கர் – 63.92%
- ஜம்மு & காஷ்மீர் – 57.76%
- கர்நாடகா – 50.93%
- கேரளா – 51.64%
- மத்தியப் பிரதேசம் – 46.50%
- மணிப்பூர் – 68.48%
- ராஜஸ்தான் – 50.27%
- உத்தரப் பிரதேசம் – 44.13%
- மேற்கு வங்கம் – 60.60%
2ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் இடங்கள்:
கேரளா 20, கர்நாடகா 14, ராஜஸ்தான் 13, மத்தியப் பிரதேசம் 6, மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசத்தில் தலா 8, அசாம், பீகார் மாநிலத்தில் தலா 5, சத்தீஸ்கர், மேற்கு வங்கத்தில் தலா 3, ஜம்மு காஷ்மீர் மற்றும் திரிபுராவில் தலா 1 தொகுதிகள் என மொத்தம் 88 தொகுதிகளில் 2ம் கட்ட தேர்தல் நடைபெற்று வருகிறது.