ஊரடங்கு உத்தரவு : காவல்துறையினரையும் தாண்டி களத்தில் குதித்த காண்டாமிருகம்!
இந்தியாவில் கொரானா வைரஸ் தீவிரமாக பரவி வருவதால், இதன் தீவிரத்தை கட்டுப்படுத்த இந்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனையடுத்து இந்தியா முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதனால், இந்த நோயின் தீவிரத்தை கட்டுப்படுத்த மக்கள் யாரும் தேவையில்லாமல் வெளியில் செல்வதை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது. இந்நிலையில், நேபாளத்தில் ஊரடங்கு உத்தரவுக்கு இடையே சாலையில் ஒய்யாரமாக நடந்து செல்லும் காண்டாமிருகம் ஒன்று, அந்த வழியே சென்ற நபரை துரத்தும் வீடியோ இணையத்தில் வைரலாகி உள்ளது.
நேபாளம் சித்வான் தேசிய பூங்கா அருகே எடுக்கபட்ட 45 வினாடிகள்காட்சியை, இந்திய வனத்துறை அதிகாரி பர்வீன் கஸ்வான் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர். இதனை அவர் தனது ட்வீட்டர் பக்கத்தில், ஊரடங்கு உத்தரவு முறையாக கடைப்பிடிக்கப்படுகிறதா, கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளதா என்று காண்டாமிருகம் ஆய்வு செய்வதாக நகைச்சுவையுடன் பலரும் கருத்து பதிவிட்டு பகிர்ந்து வருகின்றனர்.
Get this rhino a uniform! https://t.co/PWCBBZPz2Y
— Somnath Damale (@i_Damale) April 6, 2020