இன்று முதல் கேரளாவில் ஊரடங்கு தளர்வு – கண்டிக்கும் மத்திய உள்துறை அமைச்சகம்.!

Default Image

கேரளாவில் கொரோனா பாதிப்பு குறைவாக உள்ள திருவனந்தபுரம் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இன்று முதல் ஊடரங்கு கட்டுப்பாடுகள் தளர்ப்படுகின்றன.

கேரளாவில் கொரோனா பாதிப்பு குறைவாக உள்ள மாவட்டங்களில் இன்று முதல் ஊடரங்கு கட்டுப்பாடுகள் தளர்ப்படுகின்றன. அங்கு உள்ள மொத்தம் 14 மாவட்டங்கள், நான்கு மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. அதில் கண்ணூர், காசர்கோடு, மலப்புரம் மற்றும் கோழிக்கோடு ஆகிய 4 மாவட்டங்கள் கொரோனா தொற்று தீவிரம் அதிகமுள்ளதால், இவை சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளன. இதனால் இந்த மண்டலத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களும் மே 3ம் தேதி வரை ஊரடங்கு சட்டம் கடுமையாக அமலில் இருக்கும். பின்னர் இந்த நான்கு மாவட்டங்களை தவிர பிற பகுதிகளில் பெரும்பாலான சேவைகள் இன்று முதல் திரும்பியது என்பது குறிப்பிடப்படுகிறது.

அந்த வகையில் ஆரஞ்சு பி மண்டலத்திலுள்ள திருவனந்தபுரம், ஆலப்புழா, பாலக்காடு, வயநாடு மற்றும் திருச்சூர் ஆகிய மாவட்டங்களிலும், பச்சை மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ள கோட்டயம் மற்றும் இடுக்கி ஆகிய மாவட்டங்களிலும் இன்று முதல் ஊரடங்கு சட்டத்தில் பல்வேறு நிபந்தனைகள் தளர்த்தப்படுகின்றன. மேலும் ஆரஞ்சு ஏ மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ள பத்தனம்திட்டா, எர்ணாகுளம் மற்றும் கொல்லம் ஆகிய மாவட்டங்களில் ஏப்ரல் 24ம் தேதி முதல் ஊரடங்கில் சில நிபந்தனைகள் தளர்த்தப்படுகிறது. இந்த ஊரடங்கு தளர்வு குறித்து அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் கேரளாவில் இன்று முதல் இயல்பு நிலை திரும்பியது, அதுவும் சில பகுதிகள் மட்டும் ஓரடங்கில் தளர்வு செய்யப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.

இந்நிலையில், கேரளாவில் ஊரடங்கு தளர்வில் உணவகங்கள் முழுமையாக இயங்குவதற்கும், மாநிலத்திற்குள் பேருந்துகள் இயங்கவும் இன்று முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனை கண்டித்து மத்திய உள்துறை அமைச்சகம், கேரள அரசுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளது. அதில் கேரளாவின் ஊரடங்கு தளர்வு நடவடிக்கை மத்திய அரசின் வழிகாட்டுதலுக்கு எதிரானது என தெரிவித்துள்ளது. இது கொரோனா தடுப்பு நடவடிக்கையை நீர்த்து போகச் செய்யும் என்றும் மத்திய உள்துறை அமைச்சகம் எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்